தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress: நெருங்கும் தேர்தல் !காங்கிரஸ்க்கு அடுத்த ஆப்பு! வங்கி கணக்குகளை முடக்கியது வருமானவரித்துறை!

Congress: நெருங்கும் தேர்தல் !காங்கிரஸ்க்கு அடுத்த ஆப்பு! வங்கி கணக்குகளை முடக்கியது வருமானவரித்துறை!

Kathiravan V HT Tamil
Feb 16, 2024 12:04 PM IST

”இப்போது எங்களிடம் செலவழிக்கவோ, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தவோ, எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ பணம் இல்லை. நியாய் யாத்திரை மட்டுமல்ல, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்”

காங்கிரஸ்
காங்கிரஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் வழங்கிய காசோலையை வங்கிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் விசாரணையில், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. காங்கிரஸ் கட்சியின் கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ரூ.210 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது. எங்கள் கணக்குகளில் உள்ள கிரவுட் ஃபண்டிங் பணம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம் என மக்கான் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரதான எதிர்க்கட்சியின் கணக்குகள் அற்பமான காரணங்களுக்காக வரி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன,” இப்போது எங்களிடம் செலவழிக்கவோ, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தவோ, எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ பணம் இல்லை. நியாய் யாத்திரை மட்டுமல்ல, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்"

"மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஐ-டி-வாரங்களால் முக்கிய எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" என்று மக்கான் கூறி உள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று பீகார் வந்தடைந்தது. பீகாரில் இறுதிக்கட்டத்தை எட்டிய யாத்திரை, இன்று பிற்பகுதியில் உத்தரபிரதேசத்தில் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று மாலை உத்தரப் பிரதேசத்தில் நுழையும் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் கலந்து கொள்கிறார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்