தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  78 People Died In 9 Days Due To Freezing Cold In Afghanistan

Freezing cold: ஆப்கானிஸ்தானில் 77 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு - ஏன் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2023 02:12 PM IST

ஆப்கானிஸ்தானில் கடுமையான பனி காரணமாக 78 பேரும், 77 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

கடுமையான பனி
கடுமையான பனி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் பகுதியில் மைனஸ் 28 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது. பனியினால் போர்வை போர்த்தியது போல உரை பனி அப்பகுதிகளில் நிலவி வருகிறது.

இந்த கடுமையான பனியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களில் 78 பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 140 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம்," ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக உச்சக்கட்ட குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த குளிர்ச்சியான சூழ்நிலையை ஒரு வாரம் நீடிக்க உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

கடுமையான குளிர் நிலவி வருவதால் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாகக் கடுமையான பனியின் காரணமாக 77 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்