தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sudan : ஐயோ பரிதாபம்.. உணவு இல்லாமல் துடிதுடித்து உயிரிழந்த 60 பச்சிளம் குழந்தைகள்.. சூடானில் தொடரும் சோகம்!

Sudan : ஐயோ பரிதாபம்.. உணவு இல்லாமல் துடிதுடித்து உயிரிழந்த 60 பச்சிளம் குழந்தைகள்.. சூடானில் தொடரும் சோகம்!

Divya Sekar HT Tamil
Jun 02, 2023 11:29 AM IST

சூடானில் ஆறு வாரங்களில் 60 குழந்தைகள் போதிய உணவு இல்லாமல் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சூடானில் 60 குழந்தைகள் போதிய உணவு இல்லாமல் உயிரிழப்பு
சூடானில் 60 குழந்தைகள் போதிய உணவு இல்லாமல் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் சூழல்நிலவி வருகிறது. மோதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

சூடானின் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சண்டை நீடித்து வரும் நிலையில், கார்ட்டூமில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 60 கைக்குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கார்ட்டூமில் உள்ள அல்-மய்கோமா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் அருகே சமீபத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிக்கு வந்து சேர வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதும் வரவில்லை. எனவே பசியை தாங்காமலும், காயமடைந்த குழந்தைகள் முறையாக சிகிச்சை பெறாமலும் இறக்க தொடங்கின. கடந்த வாரத்தில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படியாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குழந்தைகள் காப்பகத்தின் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

சூடான் முழுவதும் தற்போது வரை சுமார் 341 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 860க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்டு போர் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

முன்னதாக  யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் கூறிகையில் "இது நாட்டின் குழந்தைகளின் பேரழிவு எண்ணிக்கையை காட்டுகிறது. சண்டை தொடரும் வரை, குழந்தைகள் விலை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சண்டையால் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமலோ, உணவு, தண்ணீர் மற்றும் மருந்து கிடைக்காமல் அவதியடைவார்கள். 

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ள உலக நாடுகளில் சூடானும் ஒன்றாகும், மேலும் மோதல்கள் காரணமாக முக்கியமான உயிர்காக்கும் பாதுகாப்பு இப்போது சீர்குலைந்துள்ளது” என தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடியே தற்போது உணவில்லாமல் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்