தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  6 Year Old Boy Orders Over Inr 80k Food Orders From Dad's Phone Leaves Him Shocked

America:கேம் விளையாட கொடுத்தது குத்தமா?ரூ 80,000-க்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2023 11:42 AM IST

தன்னுடைய தந்தையின் போனில் கேம் விளையாடுவதாக கூறி, 80,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்த சிறுவனின் செயல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது

80,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்த சிறுவன்!
80,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்த சிறுவன்!

ட்ரெண்டிங் செய்திகள்

6 வயது மகனின் சேட்டை 

 

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிறிஸ்டின். இவர் தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்று விட்டதால், கெய்த் தன்னுடைய 6 வயது மகனை கவனித்து வந்துள்ளார். வழக்கம் போல அமைதியாக இருக்க போனில் கேமை விளையாட வேண்டும் என்று மகன் சொல்ல, தன்னுடைய போனை மகனிடம் கொடுத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் கெய்த்தின் வீட்டிற்கு வந்த ஒருவர், சிக்கன் சாண்ட்விச்செஸ், ஷவர்மா, ஐஸ் க்ரீம், ஷ்ரிம்ப் இவற்றுடன்12க்கு மேற்பட்ட  சில்லி சிக்கன் ஃப்ரைஸ் அடங்கிய பார்சலை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இது குறித்து பேசியிருக்கும் கெய்த், “ என்னுடைய மனைவி பேக்கரி வைத்திருக்கிறார். கல்யாண வாரம் என்பதால் leo coney island உணவகத்தில் இருந்து ஆர்டர்கள் வந்திருக்கும் என்று நினைத்தேன். தொடர்ந்து டெலிவரிகள் வந்து கொண்டிக்க, இறுதியாக ஒருவரிடம் என்ன டெலிவரி செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் சிக்கன் ஷவர்மா ஆர்டர் செய்ததாகவும், அதையே அவர் டெலிவரி செய்ததாகவும் கூறினார். 

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே மொபலை எடுத்து பார்த்தேன்; அதில் பல உணவுகள் ஆர்டர் செய்திருப்பதும், ஆர்டர் செய்த உணவின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் நோட்டிஃபிக்கேஷனாக வந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணமும் காலியாகி இருந்தது. அப்போதுதான் இது மகன் செய்த வேலை என்று தெரிந்து கொண்டேன்.

கையை தூக்கிய மகன்

 

உடனே அவனிடம் சென்று என்ன செய்தாய் என்று கேட்டேன்; தொடர்ந்து அவனிடம் நீ செய்தது சரியில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆனால் அவனோ நான் பேசுவதை கொஞ்சம் கூட கேட்காமல் கையை தூக்கிக்கொண்டு அப்பா, அந்த பெப்பெராணி பிட்சா இன்னும் வரவில்லையா என்று கேட்டான். அதை கேட்ட உடன் எனக்கு இதை நினைத்து சிரிப்பதா? இல்லை கோபப்படுவதா என்று தோன்றியது. 

ஒரு கட்டத்தில் 183 டாலருக்கான ஆர்டருக்காக 439 டாலர் குறைந்திருப்பதாக கூறி வங்கியில் இருந்து எச்சரிக்கை மெசேஜ் வந்தது. அதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட Grubhub எனக்கு 1000 டாலருக்கான காசோலையை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் நடந்த போது நான் 10 ற்கு 9.5 சதவீதம் கோபமடைந்தேன். அடுத்த நாள் அந்த கோபமானது 8 ற்கு வந்தது. இப்போது நான் 3 இல் நிற்கிறேன். இப்போதும் நான் அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் இதை நினைத்து நான் மக்களோடு இணைந்து சிரிக்க முடியும்” என்று பேசினார். கெய்த்தின் மகன் மேசன் ஆர்டர் செய்த மொத்த உணவுகளின் விலை 1000 அமெரிக்க டாலர்கள்; அதாவது இந்திய மதிப்பில் அது 80,000 ரூபாய் ஆகும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்