தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Ire Preview: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட்! இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கும் அயர்லாந்து

IND vs IRE Preview: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட்! இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கும் அயர்லாந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 05, 2024 07:00 AM IST

இதுவரை அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு முறை கூட தோல்வியை கண்டிராத அணியாக இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கி அயர்லாந்து களமிறங்குகிறது

இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட், இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கும் அயர்லாந்து
இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட், இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கும் அயர்லாந்து

ட்ரெண்டிங் செய்திகள்

குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்குகின்றன. இந்திய அணி கடைசியாக விளையாடி 5 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தனது கடைசி 5 டி20 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றிருக்கிறது.

பேட்ஸ்மேன்களுக்கு காத்திருக்கும் சவால்

போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தில் இந்தியா, வங்கதேசத்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா ரன்குவிப்பில் ஈடுபட்டாலும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் ஆடுகளமாகவே உள்ளது.

இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 100 ரன்கள் கூட கடக்க முடியாமல் திணறியது. அதேபோல் சேஸிங் செய்த தென் ஆப்பரிக்கா அணியும் 15 ஓவர்களுக்கு மேல் தான் வெற்றியை பெற்றது.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் என வலுவான பேட்டிங் வரிசை இருந்தாலும், அவர்களுக்கு நெருக்கடி தரும் விதமாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக அயர்லாந்து உள்ளது. எனவே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்

ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு

பயிற்சி போட்டியில் சிறப்பாக பேட் செய்த ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் விளையாடும்பட்சத்தில் பண்ட் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப், ஜடேஜா என பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது.

ஜெய்ஸ்வால்க்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால் அவரை பவுலிங்குக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்

பிட்ச் நிலவரம்

அதிக வெப்பமும் இல்லாமல், குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாக பிட்ச் மெதுவாக செயல்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர் என இருவரும் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது. 

இந்தியா - அயர்லாந்து இதுவரை

இந்த இரு அணிகளும் 7 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரேயொரு முறை டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதியுள்ளன. இதிலும் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது.

எனவே இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கி அயர்லாந்து களமிறங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் பாசிடிவாக தொடங்க வேண்டும் என திட்டத்துடன் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024