General election 2024 results: 'எடுத்த உடனேயே டாப் கியர்'-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
NDA: 2024 மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரம்ப போக்குகளில் முன்னிலை பெற்றதாகக் கூறப்படுகிறது.

General election 2024 results: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
. (FILE PHOTO)
Election Result: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பணி ஜூன் 4 அதாவது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரம்ப போக்குகளில் முன்னிலை வகித்தது.
காலை சுமார் 8.30 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 158 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணி 62 இடங்களில் பின்னடைவில் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தொடர்ந்து மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி அவர்களை பதவியில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.