ஆடிப்பட்டம்தான் தேடி விதைக்கவேண்டும்! குளிர்காலத்தில் விதைக்கக் கூடாது; ஏன் தெரியுமா?
பனிக்காலத்தில் ஏன் விதைக்கக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குளிர் காலத்தில் நாம் விதைகளை விதைக்கக் கூடாது. ஏன் என்று தெரியுமா? குளிர் கால தாவங்கள் எவை என்று தெரியுமா? பனி, மழையால் குளிரால் நாம் எப்படி நடுங்குகிறோம். அதுபோல்தான் தாவரங்களுக்கும் அது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான பனிக்காலம் செடிகளின் வளர்ச்சியையே தடுக்கும். அது தாவரங்களை வளர விடாமல் செய்து, இலைகளை காயவைத்துவிடும். வேரை அழுகச் செய்துவிடும். எனவே நீங்கள் குளிர்காலத்தில் ஏன் விதைக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மண்ணின் வெப்பநிலை குறையும்
விதைகளுக்கு ஈரப்பதமும் தேவை. வெப்பமும் தேவை. அப்போதுதான் அவற்றால் முளைத்து வரமுடியும். மேலும் அது மண்ணைவிட்டு வெளியேறி வர அதிகளவிலான சூரிய ஒளியும் தேவை. பூக்கள் பூக்கவும் சூரிய ஒளி தேவை. ஆனால் குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். இதனால் மண்ணின் வளர்க்கும் திறன் குறைந்து காணப்படும். இது தாவரங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். அதனால் விதைக்கும் விதைகள் முளைக்காமலே வீணாகும். செடி முளைக்க ஈரப்பதமும் தேவை. வெதுவெதுப்பும் வேண்டும். எனவே நீங்கள் குளிர் காலத்தில் விதைகளை விதைக்காதீர்கள்.
பனியால் சேதம்
அடர்ந்து வளரும் தாவரமாக இருந்தாலும், நல்ல பூக்கள் பூக்கும் தாவரமாக இருந்தாலும், அது குளிர் காலங்களில் வளர்வது கடுமையாக பாதிக்கப்படும். சில நேரங்களில் சில தாவரங்கள் கருகி இறந்துவிடும். ஏனென்றால், பனிக்காலத்தில் குளிர்ந்த காற்று, உறையும் பனியும் செடிகள் மற்றும் பூக்களை கொன்றுவிடும். விதைகளை அவை முளைக்கும் முன்னரே கூட அழித்துவிடும்.