World Samosa Day 2024: பசிக்காகவும், ருசிக்காவும் சாப்பிடும் தின்பண்டம்..அனைத்து வயதினருக்கும் பிடித்த சமோசா வரலாறு இதோ
World Samosa Day 2024: பசிக்காகவும், ருசிக்காவும் சாப்பிடும் தின்பண்டம் என்றால் அது சமோசாவாகத்தான் இருக்கும். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் ஆக இருந்து வரும் சமோசாவின் வரலாறு, பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டங்களில் ஒன்றாக சமோசா இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சமோசா அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாகவே மாறியுள்ளது. ஏனென்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிடைக்கும் திண்பண்டமாக சமோசா இருந்து வருகிறது.
மத்திய கிழக்கு பகுதிகளில் சமோசா தோன்றியதாக நம்பப்படுகிறது. சமோசாக்கள் சிறிய வறுத்த முக்கோண பாக்கெட்டுகளாக வேகவைத்த உருளை, பட்டாணி, வேகவைத்த முட்டை, சிக்கன், பனீர் என விருப்பமான நிரப்புதலுடன் நிரப்பப்படுகின்றன.
காய்கறி சாதம் மற்றும் பனீர் போன்ற வெஜ் ஃபில்லிங் முதல் அசைவ உணவுகளான சிக்கன் அல்லது மட்டன் வரை நிரப்பப்படும் சமோசா காலை, மாலை என எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உள்ளது. சமோசாவின் முறுமுறுப்பான வெளிப்புறம் மற்றும் உள்ளே நிரப்புவதன் ஆச்சரியம் மிக்க சுவைக்காக விரும்பப்படும் திண்பண்டமாக உள்ளது.