Iran Samosa : இந்திய சமோசா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? வாங்க ஈரானுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Iran Samosa : இந்திய சமோசா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? வாங்க ஈரானுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம்!

Iran Samosa : இந்திய சமோசா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? வாங்க ஈரானுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம்!

Priyadarshini R HT Tamil
Published Sep 26, 2023 10:10 AM IST

Iran Samosa : ஈரான் சமோசா செய்வது எப்படி?

இந்தியா சமோசா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? வாங்க ஈரானுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம்!
இந்தியா சமோசா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? வாங்க ஈரானுக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம்!

எலுமிச்சை சாறு – ஒன்றரை ஸ்பூன்

மாவு பேஸ்ட் (50 கிராம் தைமாவை தனியாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவேண்டும்)

உப்பு – தேவையான அளவு

உள் நிரப்பும் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது.

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

அவல் – 50 கிராம் (பொடியாக அரைத்தது)

மல்லித்தழை - பொடியாக நறுக்கியது

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை –

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, மிருதுவான மற்றும் நெகிழ்வாக மாவை பிசைவது சமோசா செய்ய நல்லது. பிசைந்த மாவை ஒரு ஈரத் துணியால் மூடி தனியே 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவேண்டும். மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலே அரைத்த அவல் மற்றும் கொத்தமல்லித்தழைகள் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

தனியே ஊற வைத்த சமோசா மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாகக்கி, மெல்லிய பூரி போல வட்டமாக தேய்த்து, அதில் சரி பாதியை இரண்டு அரை வட்டங்களாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் சமோசாவுக்கான முக்கோண வடிவம் கிடைக்கும்.

அந்த மாவின் மேல் எண்ணெய் தடவி, சிறிது காய்ந்த மாவை தூவி, தவாவை சூடாக்கி, அதில் போட்டு சிறிது நேரம் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது ரொட்டி தயார்கிவிடும்.

அனைத்து மாவையும் ரொட்டி தயாரித்து சமையலறை துண்டு போட்டு மூடி வைக்கவேண்டும்.

பூரணத்தை சமோசாவில் ஸ்டஃப் செய்ய ஆரம்பிக்கும் முன் வெங்காய பூரணத்தில் உப்பு சேர்க்கவேண்டும்.

சமோசா மாவை முக்கோணமாக, மடித்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி மாவை கரைத்த மைதா பேஸ்ட் உதவியுடன் ஒட்டி வைக்கவேண்டும்.

இது பூரணம் வெளியே வராமல் இருக்க உதவுகிறது. இப்படி அனைத்து மாவிலும் சமோசா தயார் செய்யவேண்டும்.

தயார் செய்யப்பட்ட சமோசாவை ஒரு கிச்சன் டவலால் மூடி வைத்துவிட்டு அடி கனமான பாத்திரத்தில் ஆழமாக பொரிப்பதற்கு எண்ணெயை சூடாக்கிக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் மிதமான சூடாக வந்ததும், தீயை மிதமான நிலைக்குக் குறைத்து, எண்ணெக்கு தேவையான சமோசாக்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை இருபுறமும் பொரிக்கவேண்டும்.

அதிக தீயில் பொரிக்க வேண்டாம். பொரித்த சமோசாவை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போடவேண்டும். ருசியான ஈரான் சமோசா சாப்பிட தயாராகிவிட்டது.

மாலை டீ, காபியுடன் பரிமாற இது ஒரு அற்புதமான சிற்றுண்டி. சாஸ், புதினா சட்னியுடன் பரிமாறவேண்டும். வெங்காயத்துடன் காளான், உருளைக்கிழங்கு சேர்த்தும் பூரணம் செய்யலாம்.

பூரணம் செய்ய நீங்கள் பச்சை வெங்காயத்தைப் பயன்படுத்தலாம், அதாவது வெட்டப்பட்ட வெங்காயத்தை நீங்கள் வதக்க வேண்டியதில்லை.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.