World Oral Health Day 2024: உலக வாய்வழி சுகாதார தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!
World Oral Health Day 2024: வாய்வழி ஆரோக்கியம் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சிக்கலான அமைப்பு ஆகும். எனவே, அது பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக வாய்வழி சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

World Oral Health Day 2024: உலக வாய்வழி சுகாதார தினம் 2024: தினமும் பல் துலக்குதல் மற்றும் வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிப்பது பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களைத் தடுப்பதற்கு மட்டுமல்ல, இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலைமைகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானது.
வாய்வழி ஆரோக்கியம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது என்பதுதான், உண்மை. மேலும் நல்ல ஆரோக்கியத்தை நோக்கிய பயணம் சுத்தமான வாயிலிருந்து தொடங்குகிறது. மேலும் பல் ஆரோக்கியம் தலை மற்றும் கழுத்தில் உண்டாகும் புற்றுநோயைக் குறைக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மிகவும் தடுக்கக்கூடிய வாய்வழி நோய்கள் உலகெங்கிலும் 3.5 பில்லியன் மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவை பல் வலி, அசௌகரியம், பல் சிதைவு மற்றும் மரணத்திற்குக் கூட வழிவகுக்கின்றன.