Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!

Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!

Priyadarshini R HT Tamil
Mar 01, 2024 12:10 PM IST

Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!

Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!
Liver Detoxification : மதுபிரியரா நீங்கள்? தினமும் இருவேளை கட்டாயம்! கல்லீரலை சுத்தம் செய்யும் இந்த பானம்!

பூண்டு – 5 பல்

பட்டை – 1

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

இஞ்சி, பூண்டு, பட்டை ஆகியவற்றை உரலில் சேர்த்து தட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்தவுடன் வடிகட்டி, அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருக வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் பருகலாம்.

இதை செய்யும்போது நமது உடலில் உள்ள கழிவை சுத்தம் செய்யும் கல்லீரலை 95 சதவீதம் சுத்தம் செய்துவிடும்.

குறிப்பாக ஆல்கஹால் வழக்கமாக எடுத்துக்கொள்பவர்கள் தினமும் இருவேளை பருகிவர கல்லீரல் சுத்தமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. இந்த பானத்தை பருகுவதன் மூலம் அது ஃபேட்டி லிவர் பிரச்னையை 80 சதவீதம் குணப்படுத்துகிறது. இதனுடன் உடற்பயிற்சி செய்யும்போது, அது உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கல்லீரல் - 

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஆனால் இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றைதான் மருத்துவ உலகம் முக்கியமான உறுப்பாக கூறும். ஆனால், கல்லீரல்தான் உண்மையில் நமது உடலின் முக்கிய பாகம். அது உடலில் பல்வேறு வேலைகளை செய்து நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

அல்பியூமின் உற்பத்தி

அல்பியூமின் என்ற புரதம், அருகில் உள்ள செல்களுக்கு ரத்தத்தில் உள்ள திரவங்கள் கசிந்துவிடாமல் காக்க உதவுகிறது. இது ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்களை உடல் முழுவதும் சுமந்து செல்கிறது.

பித்த உற்பத்தி

செரிமானத்துக்கு உதவக்கூடிய திரவம்தான் பித்தம், சிறு குடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சவும் உதவுகிறது.

ரத்தத்தை வடிகட்டுகிறது

வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் ரத்தம், கல்லீரல் வழியாக செல்கிறது. நச்சுக்களையும் மற்ற நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது.

அமினோ அமிலங்களை பராமரிக்கிறது

அமினோ அமிலங்களைப் பொறுத்துதான் புரத உற்பத்தி உள்ளது. அமினோ அமிலங்கள் அளவை ரத்தத்தில் ஆரோக்கியமான அளவு வைத்திருப்பதை கல்லீரல் உறுதிப்படுத்திகிறது.

ரத்த உறைதல் ஏற்படாமல் தடுக்கிறது

வைட்டமின் கேவை பயன்படுத்திதான், ரத்தத்தை உறையச்செய்யும் உட்பொருட்கள் உருவாகிறது. அது கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம் என்ற திரவத்தால் மட்டுமே உறிஞ்சப்படுகிறது.

தொற்றுகளை தடுக்கிறது

ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது.

வைட்டமின் மற்றும் மினரல்களை சேமிக்கிறது

வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, இரும்பு மற்றும் காப்பர் சத்துக்களை போதிய அளவு சேமித்து வைக்கிறது.

குளுக்கோஸ்

ரத்தத்தில் உள்ள அதிகளவு குளுக்கோஸை நீக்குகிறது. அதை க்ளைகோஜென்களாக மாற்றுகிறது. தேவைப்படும்போது அது க்ளைகோஜென்களை குளுக்கோஸாக மாற்றும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.