உலக குலாப் ஜாமூன் தினம் இன்று..குழந்தைகள், பெரியவர்கள் என நாவின் சுவை மொட்டுகளை இன்பமாக்கும் இனிப்பு பலகாரத்தின் பின்னணி
நாவின் மொட்டுகளை இன்பம் ஆக்கும் இனிப்பு பலகாரம் ஆக குலாம் ஜாமூன் இருந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி சாப்பிடும் மகிழும் இனிப்பு பலகராமாக இருக்கும் குலாப் ஜாமூன் பின்னணி பற்றி பார்க்கலாம்.
பெயரை கேட்டாலே தலை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வித குதூகலமும், கொண்டாட்டம், நா ஊற வைக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் இனிப்பு பலகாரமாக இருப்பது தான் குலாப் ஜாமூன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி சாப்பிடும் மகிழும் இனிப்பு பலகராமான இந்த குலாப் ஜமூனை கொண்டாடும் விதமாக உலக குலாப் ஜாமூன் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அற்புதமான இனிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கத்துடன் உலக குலாப் ஜாமுன் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எப்படி, எப்போது உருவானது என்பதற்கான பின்னணி காரணம் குறித்த உறுதியான தகவல்கள் தெரியவில்லை. ஆனால் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக ஜாமூன் தினமாக கொண்டாடடப்பட்டு வருகிறது.
குலாப் ஜாமூன் உருவான வரலாறு
இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய இனிப்பு பலகாரமான குலாப் ஜாமூன், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் தெற்காசியாவில் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளது.
மகிழ்ச்சியை தரக்கூடிய உணவாக இருக்கும் குலாப் ஜாமூன் உணவு திருவிழாக்கள், விடுமுறை நாள்கள் மற்றும் பிற முக்கிய கொண்டாட்டங்களில் இடம்பெறும் இன்றியமையாத பலகாரமாக திகழ்கிறது.
குலாப் ஜாமூன் என்றால் "ரோஸ் வாட்டர் பெர்ரி" அல்லது "ரோஸ் பெர்ரி" என்று பொருள்படுகிறது. இது பால் திடப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அவை மென்மையான மாவாக குறைக்கப்பட்டு பின்னர் வறுக்கப்படுகிறது.
கோயா மாவு உருண்டைகள் பிசுபிசுப்பான சர்க்கரையுடன் கூடிய ரோஸ் சுவையுடைய சிரப்பில் ஊறவைக்கப்படுகின்றன, இந்த இனிப்பு பலகாரத்துக்கு மேலும் சுவையை கூட்ட முந்திரி அல்லது பாதாம் போன்ற கொட்டைகளுடன் சேர்த்து பரிமாறப்படும். குலாப் ஜாமூனின் சுவையும் நறுமணமும் நுட்பமாகவும் சுவாரஸ்யமான தாகவும் இருக்கிறது.
குலாப் ஜாமூன் தோற்றம்
குலாப் ஜாமூன் ஈரானில் தோன்றியதாக அறியப்படுகிறது, மேலும் மத்திய ஆசிய துருக்கிய படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு கொண்டு வந்த சர்க்கரை பாகு உடன் சுத்திகரிக்கப்பட்ட மாவில் (மைதா) தயாரிக்கப்பட்ட பஜ்ஜியில் இருந்து பெறப்பட்டது.
"குலாப்" என்ற வார்த்தை பாரசீக வார்த்தைகளான 'குல்' (மலர்) மற்றும் 'ஆப்' (தண்ணீர்) ஆகியவற்றிலிருந்து உருவானது, இது பன்னீரைக் குறிக்கிறது.
"ஜாமூன்" அல்லது "ஜாமன்" என்பது சிஜிஜியம் ஜம்போலானம் என்பதற்கான இந்தி வார்த்தையாகும். அதாவது நாவல் பழத்தின் தோற்றத்தை ஒத்து இருப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. நாவல் பழம் பொதுவாக கருப்பு பிளம் என்று அழைக்கப்படுகிறது. குலாப் ஜாமூன் சர்க்கரை பாகில் வறுத்து உருண்டையாக்கிய மாவு ஆகியவற்றின் சுவையை கொண்டதாக உள்ளது.
இந்தியா வரலாற்றில் முகலாய பேரரசர்களின் படையெடுப்புடன், லுக்மத் அல்-காசி (லோக்மா) அல்லது குலாப் ஜாமூன், ரோஸ் வாட்டர் சிரப்புடன் வறுத்த பாலாடைகளால் செய்யப்பட்ட பாரசீக உணவில் இருந்து பெறப்பட்டது.
வெதுவெதுப்பான பால் (பாலைடை கட்டிகள்) மற்றும் கேரமலைஸ் செய்யப்பட்ட சர்க்கரை வாசனையுடன் கூடிய சிறிய வறுத்த உருண்டைகள், குலாப் ஜாமூன்கள் இந்தியாவில் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ருசிக்கலாம். நாட்டில் உள்ள ஒவ்வொரு இனிப்புக் கடையிலும் குலாப் ஜாமூன் பல்வேறு வடிவங்களுடன், பதிப்புகளுடன் வழங்கப்படுகின்றன.
ராஜஸ்தானில், குலாப் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரை பாகில் ஊறவைப்பதற்குப் பதிலாக, மசாலாப் பொருட்கள், கொட்டைகள் மற்றும் தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட கிரேவியில் சமைக்கப்பட்டு பிரபலமான ‘குலாப் ஜாமூன் கி சப்ஜி’ தயாரிக்கப்படுகிறது.
குலாப் ஜாமுன் தினத்தை கொண்டாடுவது எப்படி?
உலக குலாப் ஜாமுன் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் உங்களது நாவின் மொட்டுகளை இன்பம் ஆக்குவதோடு, அதுதொடர்பான விடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி மகிழலாம்.
குலாப் ஜாமூன் சாப்பிடுதல்
வெளிப்படையாக, உலக குலாப் ஜாமூன் தினத்தன்று உங்கள் பகுதிகளில் இருக்கும் இனிப்பு கடைகளில் தயார் செய்யப்படும் சில வித்தியாசமான குலாப் ஜாமூன்களை ஆர்டர் செய்வது சுவைத்து அதை பதிவாக பகிரலாம். நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடு மகிழலாம்.
வீட்டிலேயே குலாப் ஜாமூன் தயாரித்தல்
குலாமப் ஜாமூன் தயாரிப்பு என்பது அடிப்படையில் ஒரே விஷயமாக இருந்தாலும் அதன் செய்முறை, பக்குவம் என்பது பல பகுதிகளில் சிறிய மாறுதல்களை பெறுகிறது. இதன் விளைவாக அதன் சுவையும் மெருகேறுகிறது. எனவே பல்வேறு வகையான குலாப் ஜாமூன் தயாரிப்பு விடியோக்கள் இணையத்தில் இருந்து வரும் நிலையில் அதில் விருப்பமானதை தேர்வு செய்து வீட்டிலேயே சுவை மிக்க குலாப் ஜாமூன் தயார் செய்து சாப்பிடலாம்.
சிம்பிள் குலாப் ஜாமூன் செய்முறை
குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிடக்கூடிய சிம்பிள் குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
ஜாமுன் மாவுக்கு
இனிப்பு குறைவான கோயா - 500 கிராம்
மைதா - 150 கிராம்
சோள மாவு - 100 கிராம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேவையான அளவு தண்ணீர் (மென்மையான சப்பாத்தி மாவு நிலைத்தன்மை)
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
பொரிப்பதற்கு எண்ணெய்
சிரப்புக்கு
சர்க்கரை - 500 கிராம்
தண்ணீர் - 500 மி.லி
ஏலக்காய் தூள் சிட்டிகை
ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அரைக்கிலோ கோயா எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா 150 கிராம்,சோள மாவு 100 கிராம்,எண்ணெய் 2 டீஸ்பூன்,தேவையான அளவு தண்ணீர் ஏலக்காய் தூள் 2 சிட்டிகை சேர்த்து மென்மையான பதத்திற்கு வரும் வரை நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்னர் அதனை சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டையை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது சிரப்புக்கு அதாவது பாகு செய்வதற்கு சர்க்கரை 500 கிராம், தண்ணீர் 500 மி.லி, ஏலக்காய் தூள் சிட்டிகை, ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும். நன்கு காய்ச்சிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொறித்து வைத்த உருண்டைய போட்வும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு ஊறவைக்கவும்.
பின்னர் 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.
டாபிக்ஸ்