Women's Equality Day : பெண்கள் சமஉரிமை தினத்தின் வரலாறு என்னவென்று தெரிந்துகொள்வோமா?
Women's Equality Day : பெண்கள் சமஉரிமை தினத்தின் வரலாறு மற்றும் சமஉரிமைக்கான் போராட்டம் என்னவென்று தெரிந்துகொள்வோமா?
பெண்கள் சமஉரிமை தினம் என்றால் என்ன?
பெண்கள் சமஉரிமை தினம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26ம் தேதி அனுசரிக்கப்படும் ஒரு நிகழ்வு ஆகும். இந்த நாள் 1970ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் அமெரிக்கப் பெண்கள், ஆண்களுக்கு சமமான வாய்ப்புக்களை வழங்கவேண்டும் என போராடியதன் விளைவாக வழங்கப்பட்டது.
பெரும்பாலான நிறுவனங்கள், நூலகங்கள், பணியிடங்கள் மற்றும் மற்ற மையங்கள் இந்த நாளை பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் கடைபிடிக்கிறது. இதற்காக நிகழ்ச்சிகள், சமத்துவம் நோக்கி பெண்களின் முன்னேற்றத்தை அங்கீர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது.
சட்டத்திருத்தம் ஏன்?
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் 19வது திருத்தம் மேற்கொண்ட 50 ஆண்டுவிழாவை 1970ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அமெரிக்க கொண்டாடியது. இந்தச்சட்டம்தான் பெண்களுக்கு முழு ஓட்டுரிமையை வழங்கிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி, பெண்களுக்கான தேசிய ஆணையம், பெண்களுக்கு சமஉரிமை கோரி, நாடு தழுவிய சமஉரிமை போராட்டத்தை நடத்தியது.
பெண்கள் போராட்டம்
சுதந்திர தேவி சிலையில் இருந்து சிலர் 40 அடி பேனர்களை சுமந்து ஊர்வலம் சென்று, கவனம் ஈர்த்தனர். இந்த போராட்டம், அமெரிக்க பங்குச்சந்தை கட்டிடத்தில் நிறைவடைந்தது. ஒரு லட்சம் பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அமெரிக்க முழுவதிலும் 90 பெரிய நகரங்களில், போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர். நாடு முழுவதும் நடந்த இந்தப்போராட்டம்தான் மாபெரும் பாலின சமத்துவ போராட்டமாக அமெரிக்க வரலாற்றில் கூறப்படுகிறது.
வரலாற்றின் மாபெரும் போராட்டம்
நியூயார்க் நகரில் மட்டும் 4வது அவென்யூவில் 50 ஆயிரம் பெண்கள், பெண்கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து சமஉரிமைக்காக ஊர்வலம் சென்றனர். தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பெட்டி ஃப்ரீடன், பெண்ணிய எழுத்தாளர் குளோரியா ஸ்ட்டீனெம், அமெரிக்க பிரதிநிதி பெல்லா அபுசங் பேனிர். பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமஉரிமையை கோரினார். 24 மணி நேரமும் செயல்படும் குழந்தை பராமரிப்பு மையங்களையும் வேண்டினர்.
போராட்டத்தின் விளைவு
இத்தனை பெரிய போராட்டம், உடனடியாக எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் இது பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. பெண்கள் தங்களின் உரிமைக்காக மாபெரும் போராட்டத்தை நடத்தியது வரலாற்று நிகழ்வாகவே இன்றளவும் கூறப்படுகிறது. அன்று அத்தனை பெண்களின் போராட்டம்தான், இன்று பெண்களுக்கு கிடைத்துள்ள சிறிய சுதந்திரத்துக்கும் வித்திட்டுள்ளது. பெண்கள் இயக்கத்திடம் இருந்து, முக்கிய கவனத்தை இந்த போராட்டம் குறித்த செய்திகள் பெற்றன.
பெண்கள், பெண்கள் இயக்கத்துக்கான அங்கீகாரம்
இந்த போராட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்திதான், பெண்கள் இயக்கம் குறித்து முதன்முதலில் வெளியான செய்தியாகும். இந்தப்போராட்டம்தான் சமஉரிமை சட்டத்திருத்தம் ஏற்பட காரணமாக இருந்தது. 1971-72ம் ஆண்டுகளில் காங்கிரசால் இது செய்யப்பட்டாலும், இந்த திருத்தம் மாநில உறுப்பினர்களின் முக்கால்வாசி அளவு ஆதரவு இல்லாமல் தோல்வியுற்றது. எனினும் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியை, பெண்கள் சமஉரிமை தினமாக காங்கிரஸ் அங்கீகரித்தது. இது தேசிய சட்டத்திருத்தைத் மட்டும் நினைவில்கொள்ளவில்லை. பெண்கள் முழு சமத்துவம் பெறுவதற்கான அவர்கள் எடுத்த தொடர் முயற்சிகளை கோடிட்டு காட்டுவதாகவும் உள்ளது.
ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு பின் எண்ணற்ற பெண்களின் போராட்டம் மற்றும் தியாகம் உள்ளது. உலக பெண்கள் அனைவருக்கும் இனிய பெண்கள் உரிமை தின வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்