Tamil Movies On This Day: வித்தியாசமான மேக்கிங்.. ஆக்ஷன் மோடில் கமல் - ஆகஸ்ட் 25 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies On This Day: பெரிய ஸ்டார், வெள்ளிவிழா படங்கள் எதுவும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்றைய தேதியில், 1967 களில் இருந்து தற்போது வரை தமிழில் வெளியாகியிருக்கும் படங்கள் எவை என்பதை பார்க்கலாம். இந்த தேதியில் டாப் ஹீரோக்களான கமல் ஹாசன், சரத்குமார் போன்றோரின் படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
வேட்டையாடு விளையாடு
வசூல் ராஜா எம்பிபிஎஸ், மும்பை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்து காமெடி படங்கள் கொடுத்த கமல்ஹாசன், வேட்டையாடு விளையாடு படம் மூலம் ஆக்ஷன் மோடுக்கு மாறினார். மிகவும் குறுகிய கதாபாத்திரங்கள், குறிப்பாக மாஸ்ஸான வில்லன்கள் இல்லாத போதிலும் கெளதம் மேனனின் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது.
கமலுக்கு மாஸ்ஸான ஓபனிங் சீன், கமல் படங்களில் இதுவரை இல்லாத அளிவில் கற்க கற்க பாடல் மூலம் மாஸ்ஸான ஓபனிங் கொடுத்திருப்பார் கெளதம் மேனன். அவ்வளதான் அதன் பின் இன்வெஸ்டிகேஷன், ஆக்ஷன், த்ரில்லர் என தனது ஏரியாவில் படத்தை கொண்டு சென்றிருப்பார்கள். இந்த படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு செய்து உள்ளது.