நூலகங்கள், பள்ளி வகுப்பறைகளாக மாறும் கேரள பேருந்துகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நூலகங்கள், பள்ளி வகுப்பறைகளாக மாறும் கேரள பேருந்துகள்

நூலகங்கள், பள்ளி வகுப்பறைகளாக மாறும் கேரள பேருந்துகள்

I Jayachandran HT Tamil
May 19, 2022 12:23 PM IST

காலாவதியான பேருந்துகளை உடைத்து விற்காமல் பள்ளி வகுப்பறைகளாக மாற்றி வாடகைக்கு விட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

<p>வகுப்பறைகளாக மாறும் கேரள பேருந்துகள்</p>
<p>வகுப்பறைகளாக மாறும் கேரள பேருந்துகள்</p>

கேரள அரசின் மாநில போக்குவரத்துக்கழகமான கேஎஸ்ஆர்டிசி மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் மாதாமாதம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு திண்டாட்டம் ஆகியுள்ளது. இந்நிலையில் பணநெருக்கடியைச் சமாளிக்க அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. அதன்படி, காலாவதியாகியுள்ள பழைய பேருந்துகளை உடைத்து விற்பனை செய்வதைக் கைவிட்டுவிட்டு அந்தப் பேருந்துகளை நூலகங்கள், பள்ளி வகுப்பறைகளாக மாற்றி வாடகைக்கு விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, மலைக்கிராமங்கள் மற்றும் சுற்றுலாதளங்களில் உள்ள பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பழைய பேருந்துகளை தங்கும்விடுதிகளாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதைத் தொடர்ந்து இப்போது பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்றி வாடகைக்கு விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் குறித்து கேட்டறிந்த கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உடனடியாக 2 பேருந்துகளை வாங்கி வகுப்பறையாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பழைய பேருந்துகளை உடைத்து காயலான் கடையில் விற்றால் வரும் லாபத்தைக் காட்டிலும் அதை சாமர்த்தியமாக இதுபோன்று பலன் தரும் வகையில் மாற்றுவதால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு கேரளா மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.