மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!

மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Oct 28, 2024 06:00 AM IST

மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!
மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!

நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை?

ஒரு நபருக்கு 5 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணம் எடுத்துக்கொண்டு, (அதாவது ஒரு டீஸ்பூன்) 240 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு குறைவான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அது 60 மில்லி லிட்டராகச் சுண்டவேண்டும். இதை காலையில் ஒரு வேளை தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று முதல் 12 வயது உள்ளவர்களுக்கு 30 மில்லி லிட்டரும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 60 மில்லி லிட்டரும் எடுத்துக்கொள்ளலாம்.

காய்ச்சல் இருப்பவர்களுக்கு,

காய்ச்சல் இருந்தால் தினமும் இரண்டு வேளை உணவிற்கு முன 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்கலாம்.

மழைக் காலங்களில் மழையில் நனைந்தால் ஈரத்தலையுடன், ஈர உடையுடன் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

நம் வீட்டை சுற்றி, மாடியில் மழைநீர் தேங்கினால் உடனே அதை வெளியேற்றவேண்டும். வேறு எதிலும் மழைநீர் தங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

உடலில் எந்த ஒரு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளளவேண்டும். இவற்றை கடைபிடித்தால், மழைக்கால நோய்த்தொற்று மற்றும் உடல் நலம் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தக்கூடாது

மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் சுவாசக் கோளாறு, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, மூச்சு திணறல், இதய படபடப்பு போன்றவை ஏற்படும்.

மின்சார கொசுவர்த்திகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், அறையை மூடி வைத்து இந்த புகையை நேரடியாக சுவாசிக்கக்கூடாது. இதில் எச்சரிக்கை தேவை. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மழைக்கால நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.

சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்?

சூடான உணவு உண்ணவேண்டும்.

காய்ச்சிய தண்ணீர் பருகவேண்டும்.

மலத்தை தினசரி வெளியேற்றவேண்டும்.

இரவு சீக்கிரம் படுத்து, உறங்கி காலையில் சீக்கிரம் எழவேண்டும்.

துரித உணவு வகைகளை தவிர்க்கவேண்டும்.

சூடான தண்ணீரில் குளிக்கவேண்டும்.

சத்தான உணவுகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

தினமும் 8 மணி நேரம் உறங்கவேண்டும்.

நோய்களுக்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் சரியான நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொள்வேண்டும்.

தேவையின்றி செல்போன் பயன்படுத்தி தூக்கத்தை தொலைக்கக் கூடாது.

உடலில் நோய்த்தொற்று எதுவும் மழைக்காலங்களில் ஏற்படாமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் சூரணம் வாங்கி (எஸ்கேஎம் சித்தா மற்றும் இம்ப்காப்ஸ் ஆகிய நிறுவனங்களின் மருந்துகள் தரமானதாக இருக்கும்) தினமும் கசாயம் காய்ச்சி குடிப்பது நல்லது. வழக்கமாக மாதத்தில் ஒருமுறைக் பருகலாம்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.