மாமியார் கிண்டல் செய்யும்போது மருமகள் என்ன செய்யவேண்டும்? விவாதமா? வாக்குவாதமா?
மாமியார் கிண்டல் செய்யும்போது மருமகள் என்ன செய்யவேண்டும்? வாக்குவாதத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது. விவாதித்து தீர்வு காணவேண்டும்.
உங்களை கிண்டல் செய்யும் மாமியாரிடம் வாக்குவாதம் செய்வது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளும் மனஅழுத்தம். ஏன் நீங்கள் அதை செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உறவை பாதிக்கும்
உங்கள் மாமியாரிடம் வாக்குவாதம் செய்வது அவர்களுடனான உங்களின் உறவை பாதிக்கும். நீங்கள் அவர்கள் பேசும்போது திரும்ப பேசினால் அது வாக்குவாதத்தை வளர்த்துவிடும். அது உங்கள் வீட்டில் நீண்ட நாள் டென்சனை கொண்டு வந்துவிடும். இதனால் வீட்டில் அமைதி குறையும். முடிந்தவரை சொல்லி புரியவையுங்கள். இல்லாவிட்டால், விட்டுவிடுங்கள். ஆனால் தொடர்ந்து உரையாடினால் வாக்குவாதம் முற்றி குடும்பத்தின் அமைதி பாதிக்கப்படும். எனவே சில பிரச்னைகளுக்கு தானாகவே தீர்வுகளை ஏற்படும் என்று விட்டுவிடுவது நல்லது. மாமியாரிடம் எப்போதும் சில வாக்குவாதங்களை தவிர்ப்பது வீட்டின் அமைதிக்கு நல்லது.
அதிகரிக்கும் வாய்ப்பு
உங்கள் மாமியாரிடம் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அது திடீரென பூதாகரமாகிவிடும். இருவரும் மாறி மாறி சூடாக விவாதித்துக்கொள்ளும்போது, அது பெரிய பிரச்னையை உருவாக்கிவிடும். அது காயப்படுத்தும் வார்த்தைகளை பேசவைத்தவிடும். விரும்பத்தகாத செயல்களை செய்ய வைத்துவிடும். ஒரு சொல் பல மடங்காகி பிரச்னையை பெரிதுபடுத்திவிடும். எனவே மாமியாரிடம் எந்த விஷயத்துக்காகவும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
மன அழுத்தம் மற்றும் பதற்றம்
அடிக்கடி வாக்குவாதங்கள் செய்தால், அது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். இது இருவருக்குமே மன மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இது நீண்ட நாள் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்கோளாறுக்கு வழியை ஏற்படுத்திவிடும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும். எனவே வாக்குவாதத்தை தவிர்ப்பது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும். வீட்டில் பொதுவாகவே வாக்குவாதத்தை தடுத்தால் நல்லது.
கணவன்
உங்கள் கணவருடனான உங்கள் உறவு எப்படி உள்ளது என்பதை உற்றுநோக்குங்கள். உங்கள் மாமியாருடனான விவாதத்தால் கணவன்-மனைவி உறவும் பாதிக்கப்படும். அவர்கள் இடையில் மாட்டிக்கொண்டு உங்களுக்கும் உதவ முடியாமல், அவர்களுக்கும் உதவ முடியாமல் தவிப்பார்கள். எனவே உங்கள் உறவு முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையே பிரச்னைகளை ஏற்படுத்தி, உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.
நற்பெயர்
சில நேரங்களில் தவிர்க்க முடியாத விவாதங்கள் ஏற்படும்போது அமைதியாகவே விவாதியுங்கள். வீட்டில் அனைவர் முன்னிலையிலும் சண்டை போட்டுக்கொள்ளதீர்கள். இது அனைவர் மத்தியிலும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள். வீட்டில் மற்றவர் தேவையற்றதை பேசுவதற்கும் இது இடம்கொடுக்கும்.
குழந்தைகளிடம் பாதிப்பு
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இது அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி குடும்பத்தில் எந்த விவாதத்தின்போதும் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். இது அவர்களுக்கு ஆரோக்கியமற்ற இல்லத்தை உருவாக்குகிறது. இதனால் அவர்களின் மன நலன் பாதிக்கப்படும். எனவே குழந்தைகளுக்காக நீங்கள் விவாதங்களை கைவிடுவது நல்லது. குழந்தைகளின் நலனே முக்கியம் என்பதை கருத்தில்கொண்டு தேவையற்ற விவாதத்தை தவிர்த்தல் நலம்.
முடிவில்லா பிரச்னைகளை உருவாக்கிவிடும்
இந்த விவாதங்கள் அடிக்கடி வேறு சில முன்னர் நடந்த பிரச்னைகளை கிளறுவதற்கு வழிவகுக்கும். உணர்வுப்பூர்வமாக நீங்கள் வெடித்தல், அவர்களின் பிரச்னைகள், அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுதல் என ஒருவரைப்பற்றி ஒருவர் மேலும் பேசிக்கொண்டே செல்லும் வழிதானேயொழிய, சமாதான முயற்சி எட்டப்படாமலே போய்விடும். இதனால் பிரச்னைகளுக்கு முடிவு என்பதே கிடைக்காது. இதனால் குடும்பத்தில் அமைதி குலைந்து, குடும்பம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
தேவையற்ற விஷயங்கள்
எப்போதும் பிரச்னைகளை வாக்குவாதங்கள் தீர்ப்பதில்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரச்னைகள் எப்போதும் வீட்டு சூழலை மோசமாக்குகிறது. எனவே தெளிவாக உரையாடி அந்த பிரச்னையை முடித்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டுமேயொழிய, அதை வளர்க்க நினைக்கக்கூடாது. விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அவை முற்றி வாக்குவாதங்களாகி, சண்டைகளாவிடக்கூடாது. வீட்டில் அமைதி நிலவ வேண்டுமெனில் கட்டாயம் மாமியாரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மாமியாரிடம் கட்டாயம் அமைதியான அணுகுமுறையை மட்டுமே கொண்டிருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்