ENT : காது, மூக்கு, தொண்டை பிரச்சனை.. அதற்கான தீர்வுகள் என்ன? - ஹோமியோபதியில் எப்படி சரிசெய்வது.. டாக்டர் சொல்வது என்ன?
ஹோமியோபதி பொருத்தவரை டான்சிலை எடுக்கக் கூடாது. ஏனென்றால் டான்சில்தான் நமக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. இல்லை என்றால் பாக்டீரியாக்கள் ஈசியாக உங்களை தாக்கும் நிலை ஏற்படும். எனவே டான்சிலை எடுப்பது தவறான முறை.

காது, மூக்கு, தொண்டை பிரச்சனை.. அதற்கான தீர்வுகள் என்ன? - ஹோமியோபதியில் எப்படி சரிசெய்வது.. டாக்டர் சொல்வது என்ன?
காது, மூக்கு, தொண்டை பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து ஹோமியோபதி டாக்டர் ஜெயந்தி சசிக்குமார் விளக்கியுள்ளார்.அதுகுறித்து இதில் பார்க்கலாம்.
காது, மூக்கு, தொண்டை பொதுவாக இதில் ஒரு பிரச்சனை வந்தால் கூடவே மற்றொரு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. அதைப்போல கண்டிப்பாக மற்றொரு பிரச்சனை வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.
டான்சில்
ஆனால் அதிகபட்சமாக காது வலி இருக்கும் போது தொண்டை வலியும் இருக்கும். டான்சில் என்றால் உங்கள் தொண்டை பகுதியில் ஏற்படும் வளர்ச்சி அது அதிகமாக வளரும் போது அதை நாம் டான்சில் லைட் செஸ் என்று சொல்கிறோம்.