Healthy Juice: இந்த ஒரு ஜூஸ் பாக்டீரியா எதிர்ப்பு முதல் உங்கள் உடலில் எத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாருங்க!
தக்காளியை குழம்பிற்கு பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் நாம் சாறு வடிவில் மாற்றி தினமும் குடிக்கலாம. அப்படி குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வராது. பல கொடிய மற்றும் ஆபத்தான பாக்டீரியாக்களை அகற்றுவதில் தக்காளி சாறு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்
தக்காளி இல்லாமல் நம் அன்றாட உணவு நிறைவடையாது. இந்த தக்காளி வெறும் குழம்பிற்கு மட்டும் சுவையை சேர்க்கும் என்று நினைக்கிறோம். ஆனால் இதை தினமும் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தக்காளியை குழம்பிற்கு பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் நாம் சாறு வடிவில் மாற்றி தினமும் குடிக்கலாம. அப்படி குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வராது. பல கொடிய மற்றும் ஆபத்தான பாக்டீரியாக்களை அகற்றுவதில் தக்காளி சாறு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்
தக்காளி சாறு பாக்டீரியாவைக் கொல்லும்
சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா. இது மிகவும் கொடியது. இது ஆபத்தான டைபாய்டு காய்ச்சலுக்கு முக்கிய காரணமாகும். இந்த பாக்டீரியா உலகளவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகும். தினமும் தக்காளி சாறு குடிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி இந்த பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கிறது. புதிய ஆய்வின் படி, தினமும் தக்காளி சாறு குடிப்பதை வழக்கமாக்குவது நல்லது.
புதிய ஆய்வின் விவரங்கள் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளன. தக்காளி சாறு பற்றிய ஒரு ஆய்வு வெளிவந்தது. தக்காளி மலிவானது. தினமும் ஒரு தக்காளி சாறு எடுத்து குடித்தால் போதும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் போன்ற பயோஆக்டிவ் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. அவை பாக்டீரியாவைக் கொல்லும்.
புள்ளிவிவரங்களின்படி, டைபாய்டு காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 21 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இரண்டு லட்சம் பேர் இறக்கின்றனர். டைபாய்டுக்கான தடுப்பூசிகள் கிடைத்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல குழந்தைகள் இறக்கின்றனர். அதனால் தான் குழந்தைகள் தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பது நல்லது.
இந்திய உணவு வகைகளில் தக்காளி முதலிடத்தில் உள்ளது. உணவிலும் சிறந்து விளங்குகிறது. இதில் லைகோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனை உண்பதால் இதயநோய், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறையும். மேலும், தக்காளியில் உள்ள லைகோபீன் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தக்காளியை தினமும் சாப்பிடுபவர்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறார்கள். தக்காளி நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கிறது. எனவே தினமும் மூன்று ஸ்பூன் தக்காளி சாறு குடிக்க முயற்சி செய்யுங்கள் அல்லது ஒரு தக்காளியை நேரடியாக சாப்பிடுங்கள்.
வாய்ப்பு உள்ளவர்கள் தக்காளியை தினமும் சூப் செய்தும் சாப்பிடலாம்.
தக்காளி சூப்
தக்காளி சூப் மிகவும் பிரபலமானது. இந்த சூப் மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இருக்கும். இது இனிப்பு-புளிப்பு சுவை கொண்டது. இந்த சூப் செய்வது மிகவும் எளிது. இந்த சூப் செய்ய, தக்காளியை வேக வைத்து, அவற்றை உரிக்க வேண்டும், விதைகளை அகற்ற வேண்டும். அதன் பிறகு ப்யூரி செய்து உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, சீரகம் பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு குடிக்கலாம். அதன் பிறகு சிறிது கிரீம் சேர்க்கலாம். இப்படி செய்தால் அவ்வளவுதான் உங்கள் தக்காளி சூப் தயார். இந்த குளிருக்கு இதமாக இருககும்.