Home Remedy for Tonsillitis : டான்சில்ஸ்க்கு ஒரு வாரத்தில் தீர்வு கொடுக்கும்! இப்டி மட்டும் செய்ங்க போதும்!
Home Remedy for Tonsillitis : சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு தரும்.
சளி, இருமல், தொண்டை கரகரப்பை நீக்கக்கூடிய பாரம்பரிய மருத்துவ குறிப்பு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
டான்சில் என்பது தொண்டைப்பகுதியில் உள்ள உறுப்பு. நாம் சுவாசிக்கும்போது, அதில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டால், அதை உடல் எதிர்த்து போராடும். அதுபோன்ற நேரத்தில் தொண்டைப்பகுதியில் புண்கள், வீக்கம் ஏற்படும். இது நாளடையில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
டான்சில் என்பது நமது தொண்டைப்பகுதியில் வளரக்கூடிய அதிகப்படியான சதை. இது இருந்தால் விழுங்குவதில் பிரச்னைகள், காது வலி, காய்ச்சல் மற்றும் உடல் சில்லிடுவது, தலைவலி, தொண்டை கரகரப்பு ஏற்படுவது.
தொண்டை மற்றும் தாவாய் பகுதி கொழகொழவென ஆவது. இவையெல்லாம் 48 நாட்களுக்கும் மேல் நீடித்தால், அது டான்சிலிடிஸ் எனப்படும் தொண்டையில் சதை வளரும் பிரச்னையின் அறிகுறிகள் ஆகும்.
இது அதிகரித்தால் மூச்சுவிடுவதில் சிரமம், சாப்பிடுவது, விழுங்குவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.
இந்த சதைப்பகுதி சிவப்பு வண்ணத்தில் வெள்ளை புள்ளிகளைக் கொண்டதாக இருக்கும். தொண்டைப்பகுதி கொழகொழப்பாக இருக்கும்.
இதற்கு ஆன்டி பயோடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
இளஞ்சூடான, குளிர்ந்த நீர் பருகவேண்டும். சூடான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளிக்க வேண்டும். முற்றிய நிலையில் இதற்கு அறுவைசிகிச்சை செய்யப்டுகிறது.
அறுவை சிகிச்சை செய்தால், எதிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும். ஏனெனில் டான்சில்ஸ் என்ற உறுப்புதான் சுத்தமான காற்றை உள்ளுக்குள் அனுப்ப வழிவகுக்கும்.
ஆனால் அறுவைசிகிச்சையில்லாமல் இந்த எளிய முறையிலே டான்சில்சை ஒரு மாதத்தில் விரட்டியடிக்க முடியும்.
சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு தரும்.
செய்வது எப்படி?
பூண்டு – 2 (முழுவதும்)
(எப்போதும் மலைப்பூண்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது)
பூண்டை தோளுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளை துணியில் சேர்த்து மூட்டை போல் கட்டிக்கொள்ள வேண்டும்.
அதை விளக்கில், மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி இந்த மூட்டையை அதில் காட்ட வேண்டும். இரண்டு நிமிடங்கள் காட்டினால் போதும். வெள்ளைத்துணியில் கரி படித்து உள்ளே உள்ள பூண்டின் சாறு இறங்கி வரும். அப்போது அதிலிருந்து வரும் சாற்றை பிரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த சாறை பிழிந்துகொள்ள வேண்டும். இந்த கரி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லெண்ணெயில் இருந்து வெளியேறும் கார்பன் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும். அது சளி, இருமலை சரிசெய்யும்.
ஒருமுறை மட்டும்தான் விளக்கில் காட்ட வேண்டும். மீண்டும், மீண்டும் காட்டக்கூடாது.
அந்த சாறில் சம அளவு தேன் கலந்துகொள்ள வேண்டும். தேன் கலப்பதால் இது 10 நாட்கள் வரை கெட்டுப்போகாது. தேன் நல்ல தேனாக இருக்க வேண்டும். தேனோடு சேரும் எந்தப்பொருளும் விரைவில் கெடாது. தேனில் ஆன்டி செப்டிக், ஆன்டிமைக்ரோயயோம் உட்பொருட்கள் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். தேன் நமது தொண்டையில் படும்போது, இருமல் நின்றுவிடும்.
தொடர்ந்து தேன் சாப்பிட்டு வர சளி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் குணப்படுத்தும். காலை, இரவு ஒரு ஸ்பூன் சிறிது, சிறிதாக சப்பி சாப்பிடவேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இதில் சிறிது தொட்டு தொண்டை பகுதியில் தடவிவிடலாம். கண்ணுக்கு தெரியாத கிருமிகளை துரத்தியடிக்கக்கூடிய திறன் பூண்டுக்கு உள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்