தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rare Facts: உங்கள் உடலைப் பற்றிய விநோதமான, அதிசயத்தக்க 50 தகவல்கள்

Rare Facts: உங்கள் உடலைப் பற்றிய விநோதமான, அதிசயத்தக்க 50 தகவல்கள்

I Jayachandran HT Tamil
Jun 15, 2023 12:44 PM IST

உங்கள் உடலைப் பற்றிய விநோதமான, அதிசயத்தக்க 50 தகவல்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலைப் பற்றிய விநோதமான, அதிசயத்தக்க 50 தகவல்கள்
உங்கள் உடலைப் பற்றிய விநோதமான, அதிசயத்தக்க 50 தகவல்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

1. உங்கள் கண்கள் நிமிடத்துக்கு 20 முறை சிமிட்டுமாம். இது ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி முறைக்கு மேலே!

2. உங்கள் வாழ்நாள் முழுவதும் காதுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்!

3. காதுக்குள் உருவாகும் பிசுக்கு, அழுக்கு ஒரு வகை இனிப்பாகுமாம்!

4. உங்கள் நாக்கில் 8,000 சுவை அரும்புகள் உள்ளன. ஒவ்வோர் அரும்பிலும் 100 செல்கள் இருக்கும். அவைதான் சுவையைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன!

5. உங்கள் வாழ்நாளில் 40 ஆயிரம் லிட்டர் எச்சில் அல்லது உமிழ்நீரை நீங்கள் உற்பத்தி செய்கின்றனர். இதை வேடிக்கையாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உமிழ்நீரைக் கொண்டு 500 பாத்டப்களை நிரப்பிவிடலாம்- உவ்வாக்!

6. தினசரி உங்கள் மூக்கில் இருந்து ஒரு கப் சளியாவது வெளியாகிறது!

7. நீங்கள் தூங்கிமுடித்து காலையில் எழுந்திருக்கும்போது 1 செ.மீ. உயரமாகி இருப்பீர்கள். தூங்கும்போது நார்மலாகிவிடுவீர்கள். இதற்குக் காரணம் பகல்வேளையில் உங்கள் எலும்புகளுக்கு இடையிலுள்ள ஜவ்வுகள் விரிந்து பின்னர் சுருங்குவதால் இவ்வாறு நேரிடுகிறது.

8. நீங்கள் தினமும் 12 மணிநேரம் நடந்தால் உலகத்தைச் சுற்றிவர சராசரியாக ஒரு மணிதருக்கு 690 நாட்கள் ஆகுமாம்!

9. உங்கள் உடலில் சோர்வே அடையாத ஒரு உறுப்பு இதயம்!

10. ஒவ்வொரு மாதமும் உங்களது உடல் தோல் உரிந்து புதிதாக உருவாகிவிடும். இதை வேறுவழியில் சொல்வதென்றால் உங்கள் வாழ்நாளில் உங்களுக்கு 1000 புதிய தோல்கள் உருவாகியிருக்கும்!

11. உங்கள் உடலில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைத் துளைகள் உள்ளன!

12. உங்கள் உடலில் இருந்து நிமிடத்துக்கு 30 ஆயிரம் இறந்த செல்கள் உதிர்கின்றன!

13. நீங்கள் 70 வயது வாழ்ந்திருப்பீர்களானால் உங்களது இதயம் அதுவரை 250 கோடிமுறை துடித்திருக்கும்!

14. ஒருவர் தன் வாழ்நாளில் முழுமையாக ஒரு ஆண்டு கழிவறைக்குள்ளேயே நேரத்தை செலவிட்டிருப்பார்கள்!

15. சராசரியாக ஒருநாளைக்கு நீங்கள் வெளியிடும் ஆபான வாயுவை வைத்து ஒரு பெரிய பார்ட்டி பலூனை நிரப்பிவிடலாம்!

16. ஒரு மாதத்தில் நீங்கள் கழிக்கும் சிறுநீரை வைத்து ஒரு குளியல் தொட்டியை நிரப்பி விடலாம்!

17. ஒவ்வொரு நொடிக்கும் உங்களது உடல் 2 கோடியே 50 லட்சம் புதிய செல்களை உருவாக்குகிறது.

18. உங்கள் உடலில் உள்ள மிகப் பெரிய எலும்பு ஃபெமர் எனப்படும் தொடை எலும்பு. மிகச் சிறிய எலும்பு ஸ்டிர்அப் எனப்படும் உங்கள் செவிப்பறையில் அமைந்திருக்கும்.

19. உங்கள் முழங்கையை உங்கள் நாக்கால் வருட முடியாது. சிலர் நினைப்பார்கள் முடியும் என்று. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

20. சந்திரன் உங்கள் தலைக்கு மேல் இருக்கும் சமயத்தில் உங்களது உடல் எடை சற்றே குறைந்திருக்குமாம். சராசரியாக 100 கிலோ எடையுள்ளவர்களுக்கு 50 கிராம் குறையுமாம்.

21. நீங்கள் தும்மல் போடும்போது அம்மா, அப்பா அல்லது பிளஸ் யூ என்று சொல்லக்கூடும். ஏனென்றால் அப்படித் தும்மும்போது உங்களது இதயம் ஒரு மில்லி செகண்ட் நேரத்துக்கு நின்று மீண்டும் துடிக்கும். பயப்பட ஒன்றுமில்லை.

22. நீங்கள் உரக்க தும்மினால் உங்களது விலா எலும்பு முறியக்கூடும். அதேபோல தும்மலை அடக்க முயற்சி செய்தீர்கள் என்றால் கழுத்தையும் தலையையும் இணைக்கும் ரத்த நாளம் சிதைந்து மரணம் நிகழக்கூடும். தும்மலினால் ஏற்படும் அதிர்வினால் செவிப்பறை சிதையலாம். மூளை, கண்களின் நரம்புகள் சேதமடையலாம். தொண்டையில் புண் ஏற்படும்.

23. இயர்போன்களை பயன்படுத்தினால் உங்கள் காதுகளில் ஒரு மணிநேரத்தில் 700 மடங்கு பாக்டீரியாக்கள் உருவாகுமாம். இதைத் தாங்கிக் கொள்ளமுடியாததால்தான் காதுகளில் வலி உண்டாகிறது. இது நீண்டநாள் காதுகேட்கும் திறனை பாதித்துவிடக்கூடும்.

24. உங்கள் வாயில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லிட்டர் எச்சில் ஊறுமாம்!

25. நீங்கள் விழித்திருக்கும்போது உங்கள் மூளை செயல்படுவதைவிட நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மூளை அதிவேகமாகச் செயல்படுமாம்.

26. உங்கள் உடலில் உள்ள ரத்தக்குழாய்களை இணைத்து பரவ வைத்தால் பூமத்தியரேகையை நான்குமுறை சுற்றிவிடலாமாம்.

27. உங்கள் உடலில் இருந்து மிக மெலிதான ஒளி வெளிப்படுமாம். ஆனால் அதை நமது கண்களால் பார்க்கமுடியாத அளவுக்குத்தான் இருக்குமாம்.

28. ஒரு சராசரி மனிதரின் தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் இருக்குமாம்.

29. உங்கள் உடலில் இருந்து ஆண்டுதோறும் 4 கிலோ தோல் செல்கள் உதிருமாம்.

30. குழந்தைகள் குறைந்தபட்சம் ஒருமாதம் ஆகும்வரை கண்ணீர் சிந்தாதாம்.

31. உங்களது தகவல் நரம்புகளில் தகவல்கள் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் கடக்குமாம்.

32. ஒருவரது வாழ்க்கையில் சராசரியாக 300 கோடி முறை இதயம் துடிக்குமாம்.

33. உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட 10 சதவீதம் சிறியது.

34. மனிதர்களின் பற்கள் ஒரு சுறா மீனுடைய பற்களுக்கு இணையான வலுவானவையாம்.

35. மனிதர்களின் மூக்கு 3 லட்சம் வித்தியாசமான வாசனைகளை நுகரும் திறன் வாயந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

36. ஒரு மனிதரின் உடலில் 8 சதவீதம் ரத்தம் அடங்கியிருக்குமாம்.

மனிதர்களின் கைரேகைகள் போலவே அவர்களது நாக்கின் ரேகையும் தனித்துவமானதாம்.

37. ஒரு குழந்தையின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்களை விரித்துவிட்டால் சுமார் 60 ஆயிரம் மைல்கள் இருக்குமாம். அதேபோல் வளர்ந்த மனிதர்களின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்கள் சுமார் 1 லட்சம் மைல்கள் இருக்குமாம்.

38. புஞ்சைகள் ஒரு மனிதரின் மூளையைக் கட்டுப்படுத்தி கொடூரமான காட்டுமனிதராக ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்தனவாம்.

39. உங்கள் உடல் பருவம் எய்தியபின் வளர்ச்சி நின்ற பிறகும் உங்களது காதுகள், மூக்கு வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம். இதற்கு காரணம் புவியீர்ப்பு விசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

40. உங்கள் கண்களில் மேல்புறம் உள்ள கார்னியா படலத்துக்கு எந்த ரத்த விநியோகமும் கிடையாது. இதனால் அது நேரடியாக காற்றிலிருந்து பிராணவாயுவைப் பெறுகிறது.

41. மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்பை வைத்து 7 சோப்பு கட்டிகளைத் தயாரித்து விடலாமாம்.

42. பிராணவாயு சப்ளை நின்ற பிறகும் மூளை மூன்றிலிருந்து ஆறு நிமிடங்களுக்குச் செயல்படுமாம்.

43. மனிதர்கள் சிசுவாக இருக்கும் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களது கைரேகைகள் உருவாகின்றன. முதல் மூன்று மாதங்கள் ஆனபின் முழுமையாக வளர்ச்சியடைந்த நிரந்தரமான கைரேகைகள் உருவாகிவிடுமாம்.

44. உங்கள் உடலில் மிகவும் வலுவான சதை உங்கள் நாக்கு. நாக்கில் எட்டு அடுக்கு தசைகள் உள்ளன.

45. எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு உத்வேக சக்தி இருக்குமாம். இது ஒருவர் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டால் அந்த சக்தி வெளிப்பட்டு போராடி காப்பாற்ற வைக்குமாம்.

46. மனித உடலில் சில பாகங்கள் ஒருமையாகவும் சில இரண்டாகவும் இருக்கும். ஆனால் இரண்டாக அமைந்துள்ள பாகங்களில் ஒன்று இருந்தாலே நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்.

47. உங்களது சிறுகுடலில் நீளம் உங்கள் உயரத்தைக் காட்டிலும் பெரியதாகும். அதன் நீளம் சுமார் 23 அடிகள்.

48. மனிதர்களின் பாதங்களில் மட்டும் மொத்தமுள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு அமைந்துள்ளதாம்.

49. உங்கள் உயரத்தை கணக்கிட்டால் இரவில் இருப்பதைவிட பகலில் உயரமாக இருப்பீர்கள்.

50. உங்களுக்குத் தெரியுமா? உங்களால் ஒரே சமயத்தில் மூச்சை இழுத்துக் கொண்டே உணவை விழுங்க முடியாது.

WhatsApp channel

டாபிக்ஸ்