தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Know About The Disadvantages Of Ghee

Ghee Disadvantage: நெய்யில் இருக்கும் தீமைகள்! யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 09:52 PM IST

ஆரோக்கியம் நிறைந்த கொழுப்பு வகையான நெய் எல்லோருக்கும் பொருத்தமானது கிடையாது. உங்களுக்கு நெய் பிடிக்கவில்லை என்றாலும் அதை பற்றியும், நெய் சில ஒத்துப்போகாமல் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய தீமைகளையும் தெரிந்துகொள்வோம்.

நெய்யில் இருக்கும் தீமைகள்
நெய்யில் இருக்கும் தீமைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

லேசாக தொட்டு நக்கினாலும் அதன் அற்புத சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட தூண்டும் விதமாக அமைந்துள்ள நெய்யை பிடிக்காதவர்களும் ஏராளமானோர் உள்ளனர். நெய் சாப்பிடாவிட்டாலும் பராவயில்லை என்று அவர்கள் கூறுவதுபோல் அதை தவிர்ப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த வித குறைபாடும் ஏற்படாது என்பதும் உண்மையே.

ஆயுர்வேத முறைப்படி நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மிக முக்கியமானதாக நெய் உள்ளது. அதே சமயம் இது எல்லோருக்கும் பொருத்தமான உணவு இல்லை என்கிற பேச்சும் உள்ளது. இதில் எந்தளவுக்கு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதோ, அதே அளவு உடலில் தீங்கு உண்டாக்கும் விளைவுகளும் உள்ளது.

பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ரேகா ராதாமோனி, நெய் சாப்பிட்டால் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஆபத்துகளும் குறித்து விவரித்துள்ளார். நீண்ட கால அஜீரண கோளாறு, வயிறு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் நெய் அதிகமாக சாப்பிடக்கூடாது.

யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?

ஜீரணிக்க கனமான நெய்

அஜீரண கோளாறு இருப்பவர்கள் தங்களது உணவில் நெய் என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு எதிரான உணவாகவே உள்ளது. இது சிலருக்கு மலமிளக்கியாக உள்ளது. நீண்ட கால செரிமாண கோளாறு, வயிறு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதிகமாக நெய் சாப்பிடக்கூடாது.

கபத்தை அதிகரிக்கும் நெய்

உடலிலுள்ள கபத்தை அதிகரிக்கும் தன்மை நெய்க்கு அதிகம் உள்ளது. எனவே சளி மற்றும் இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போது நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதேபோல் சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் நெய்யை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.

அஜீரண கோளாறுடன் இருக்கும் கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு உப்புசம் ஆவது, அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் நெய் சாப்பிடும் அளவை அவர்கள் குறைக்க வேண்டும். குறிப்பாக சளி, வயிறு கோளாறு இருப்பவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

கல்லீரல் பிரச்னை

கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னை அல்லது நோய் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பாட்டில் நெய் எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நெய்யில் உள்ள நன்மைகள்

வயது மூப்பு ஆவதை தடுக்கும் சக்தி நெய்க்கு உள்ளது. உங்களது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. அதே போல் நெய் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. எனவே பார்வையில் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு உணவில் அதிக நெய் சேர்த்து கொடுக்கலாம்.

நினைவற்றலை பெருக்க உதவுவதோடு கூர்மையான அறிவாற்றலை வளர்க்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து, வெறும் வயிற்றில் அதை குடித்து வந்தால் மலமிளக்கி பலனை பெறலாம். மிக முக்கியமாக சருமத்தின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாத்து, சேதங்கள் உண்டாவதை குறைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்