உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த 9 உணவுகள் உங்கள் தட்டில் கட்டாயம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த 9 உணவுகள் உங்கள் தட்டில் கட்டாயம்!

உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த 9 உணவுகள் உங்கள் தட்டில் கட்டாயம்!

Priyadarshini R HT Tamil
Dec 20, 2024 10:39 AM IST

உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் என்ன?

உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த 9 உணவுகள் உங்கள் தட்டில் கட்டாயம்!
உங்கள் மூளையை கூராக்கி, நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த 9 உணவுகள் உங்கள் தட்டில் கட்டாயம்!

வால்நட்ஸ்கள்

சால்நட்ஸ்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளது. இந்த மூன்றும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் ஆகும். இது உங்களின் மூளை ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. எனவே வால்நட்களை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் நினைவாற்றலைத் தக்க வைக்கிறது. இதனால் உங்கள் மூளை சுறுசுறுப்பாகிறது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளில் குர்குமின் என்ற உட்பொருள் உள்ளது. அதுதான் மஞ்சளுக்கு மஞ்சள் நிறத்தை தரக்கூடியது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்களைக் கொண்ட உட்பொருள் ஆகும். குர்குமின், நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனஅழுத்த அறிகுறிகளைப் போக்குகிறது. மேலும் நியூரோஜெனிசிஸ் மூலம் புதிய மூளை செல்கள் வளர்வதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சில் எண்ணற்ற வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது மூளையை ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி சத்துக்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் நினைவாற்றல் மற்றும் மனநலனை ஊக்குவிக்கிறது.

ப்ரோக்கோலி

ப்ரோகோலியில் அதிகளவில் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. இது மூளையின் திறனை அதிகரிக்கச் செய்து, நினைவாற்றலை மேம்படுத்தி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் மூளை ஃப்ரி ராடிக்கல்களில் இருந்து செல்கள் சேதமடைவதை காக்கிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் எண்ணற்ற ஃப்ளேவனாய்ட்கள் உள்ளது. இதில் உள்ள கஃபைன்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ஃப்ளேவனாய்ட்கள், மூளைக்கான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இது நினைவாற்றல், கவனம் மற்றும் கற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இதில் உள்ள மிதமான கஃபைன்கள், உங்கள் மூளைக்கு ஊட்டத்தைக் கொடுக்கின்றன. இதனால் டார்க் சாக்லேட் மூளைக்கு நெருக்கமான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும்.

பரங்கி விதைகள்

பரங்கி விதைகளில் அதிகளவில் சிங்க், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளன. இவையனைத்தும் மூளை ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் ஆகும். சிங்க் சத்துக்கள் நரம்புகள் சிக்னல் கொடுக்க உதவுகிறது. மெக்னீசியச் சத்துக்கள் கற்றல் திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இரும்புச்சத்துக்கள் மூளையில் அழுக்குகள் தங்காமல் பார்த்துக்கொள்கிறது. இந்த சிறிய விதைகள் உங்கள் மூளை ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஃபேட்டி ஃபிஷ்

சால்மன் போன்ற ஃபேட்டி ஃபிஷ்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம். இது உங்கள் மூளை செல்களில் உள்ள மெம்ரைன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயோன தொடர்புகளை அதிகரித்துக்கொள்ள உதவுகிறது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது. இது நினைவாற்றல் இழப்பு ஏற்படும் ஆபத்தை குறைத்து, உங்கள் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது.

முட்டை

முட்டைகளிளில் கோலைன்கள் அதிகம் உள்ளது. இது அசிட்டில்சோலைன் என்பதை உற்பத்தி செய்ய தேவையான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது நினைவாற்றல் மற்றும் மனநலன் ஆகிய நியுரோடிரான்ஸ்மிட்டர்களுடன் தொடர்புடையது. இதில் வைட்டமின் பி 6, பி 12 மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது உங்கள் மூளையில் சுருக்கத்தைக் குறைக்கும். இது உங்கள் மூளையின் ஒட்டுமொத்த திறனையும் அதிகரிக்கும்.

ப்ளூபெரி

ப்ளூபெரிகளில் ஆந்தோசியானின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் மூளையை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. இது மூளை செல்களுக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும் செல்களுக்கும் இடையில் தொடர்பை மேம்படுத்துகிறது. எனவே நீங்கள் அதிகம் ப்ளுபெரிகளை சாப்பிடும்போது, அது உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்படாமல் காக்கிறது. மேலும் அல்சைமர் போன்ற நினைவாற்றல் இழப்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.