உங்கள் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமா? மூளை செயல்பாட்டை கூர்மையாக்க கொடுக்க வேண்டிய 5 மூலிகைகள்
- உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக மூளை இருந்து வருகிறது. இதற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் போது திறன்பட செயல்படுகிறது. அந்த வகையில் நினைவாற்றலை கூர்மையாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
- உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக மூளை இருந்து வருகிறது. இதற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் போது திறன்பட செயல்படுகிறது. அந்த வகையில் நினைவாற்றலை கூர்மையாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
(1 / 7)
आजच्या मुलांवर मानसिक दडपण पूर्वीपेक्षा खूप जास्त आहे यात शंका नाही. चढाओढीच्या या स्पर्धेच्या युगात मुलांवर अधिक अभ्यास करण्याचा, गोष्टी समजून घेण्याचा आणि लक्षात ठेवण्याचा दबाव पहिल्यापासूनच वाढतो. मेंदू हा आपल्या शरीराच्या इतर भागासारखाच असतो, म्हणजेच त्याला चांगले पोषण मिळाले तर तेही चांगले काम करते. (freepik)
(2 / 7)
குழந்தைகளின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வகையில் அவர்களின் உணவில் சில மாற்றங்களைச் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த கவனமும் படிப்பில் மீது ஏற்படுவதுடன், அவர்களின் நினைவாற்றல் கூர்மையாகிவிடும். குழந்தைகளின் நினைவாற்றலை கூர்மையாக்க உதவும் எளிதில் கிடைக்கும் சில ஆயுர்வேத மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(3 / 7)
துளசி: எளிதில் கிடைக்கூடிய இந்த மூலிகையை உங்கள் குழந்தைகள் உணவில் ஒரு அங்கமாக்குங்கள். துளசி செடி வீட்டில் வளர்க்கூடியதாகவும், பெரும்பாலோனர் வீடுகளில் இருக்கும் செடியாகவும் உள்ளது. இந்து மதத்தில் புனிதமாக கருதப்படும் துளசி ஆயுர்வேதத்திலும் மிகவும் நன்மைகளை தரும் மூலிகையாக திகழ்கிறது. ஜலதோஷம் அல்லது பிற பருவகால நோய்கள் பாதிப்பு இருந்தாலும், துளசி இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகை குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. சூடான பால் அல்லது ஸ்மூத்திகளில் துளசிப் பொடியைத் தொடர்ந்து கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது, மனதை அமைதிப்படுத்தி, ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரிக்கிறது
(4 / 7)
புதினா: ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் புதினா செரிமான அமைப்பை வலுப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல வழிகளில் நன்மை தருகிறது. குழந்தைகளின் செறிவு தன்மையை அதிகரிக்கவும், அவர்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் புதினா சிறந்த தேர்வவாக இருக்கும். குழந்தைகள் அறையில் உள்ள டிஃப்பியூசரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்க்கவும். இதன் இனிமையான வாசனை குழந்தையின் மனதை அமைதிப்படுத்தும். மேலும், குழந்தைகளுக்கு புதினா டீ தயார் செய்து கொடுக்கலாம். இது ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது
(5 / 7)
மஞ்சள்: ஒவ்வொரு சமையலறையிலும் இருக்கும் உணவு பொருாக மஞ்சள் இருந்து வருகிறது. உணவின் சுவை மற்றும் அமைப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சளி அல்லது காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் அல்லது பிற உடல்நல பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாக்க, மஞ்சளை விட சிறந்தது எதுவுமில்லை. உங்கள் குழந்தைகளின் மூளையை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு சிட்டிகை மஞ்சளுடன் பால் கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும்
(6 / 7)
பெருஞ்சீரகம்: உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவது முதல் சீரான செரிமானத்தை பராமரிப்பது வரை, பெருஞ்சீரகம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மிக முக்கியமாக நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மையை கொண்டதாக பெருஞ்சீரகம் உள்ளது. இதை சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்துவதோடு, செறிவு தன்மையும் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த பெருஞ்சீரகத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
(7 / 7)
அஸ்வகந்தா: அஸ்வகந்தா என்பது ஒரு வகை ஆயுர்வேத மருத்துவ தாவரமாகும். இது பல வகையான மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இதனை உட்கொள்வதால் மன அழுத்தம் நீங்கும். இது தவிர, மனதை கூர்மைப்படுத்தவும் செய்கிறது. குழந்தைகள் தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது அஸ்வகந்தாவை பாலில் கலந்து கொடுத்தால் அவர்களின் மூளை செயல்பாடு சீராகும்
மற்ற கேலரிக்கள்