உங்கள் குழந்தைகளை வெற்றியாளராக்க வேண்டுமா? அதற்கு அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தைகளை வெற்றியாளராக்க வேண்டுமா? அதற்கு அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வேண்டுமெனில் ஒரு தாயாக அதற்கு நீங்கள் என்னசெய்யவேண்டும் என்று பாருங்கள். அதற்கு நீங்கள் சில விதிகளை உங்கள் குழந்தைகளுக்கு விதிக்கவேண்டும். ஏனெனில் ஒரு தாயின் வழிகாட்டி என்பது ஒரு குழந்தைக்கு மிகவும் அவசியம் ஆகும். குழந்தைகள் தங்களின் தோல்விகளை வெற்றிகளின் படிகட்டுக்களாக மாற்ற வேண்டுமெனில், அதற்கு அவர்களுக்கு தாயில் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். எதிர்கால வெற்றிகளை அவர்கள் தட்டிப்பறிக்கவேண்டும் எனில் அவர்களின் அம்மாக்கள் சில விதிகளை குழந்தைகளுக்கு விதிக்கவேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளின் வெற்றிக்காக அவர்களுக்கு 8 விதிகளை விதிக்கவேண்டும். அது உங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கை நிறைந்த பெரியவர்களாக வளர்ப்பதற்கு உதவும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அனைவருக்கும் மரியாதை
உங்கள் குழந்தைகளுக்கு அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு அனுதாபத்தையும், வலுவான மற்றும் முடிவுறா உறவுகளையும் அமைத்துக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையும், மற்றவர்களை மதிக்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.
கடின உழைப்பு
நாம் இன்றைய காலத்தில் கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான உழைப்பே சிறந்தது என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடின உழைப்பு என்பதற்கான பலன் நிச்சயம் உண்டு. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் முயற்சிகள்தான் அவசியம், அதற்கான பலன்கள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை வலியுறுத்துங்கள், இதனால் அவர்களுக்கு வளர வேண்டும் என்ற மனநிலை ஏற்படும். உங்கள் குழந்தைகளுக்கு சவால்களை எதிர்கொள்ள உதவும். அதனுடன், அவற்றில் இருந்து கற்கவும் தூண்டுதலாக அமையும்.
பொறுப்பு
அவர்கள் செய்யும் செயல்களில் அவர்கள் எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினால், அது அவர்களின் செயல்களில் நேர்மையை அவர்களுக்கு வலியுறுத்தும். உங்கள் குழந்தைகளுக்கு விளைவுகளை புரிந்துகொள்ள உதவும். மேலும் அவர்களுக்கு நல்ல தேர்வுகளை செய்யவும் அது உறுதுணையாக இருக்கும்.
பொருளாதார விழிப்புணர்வு
உங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார விழிப்புணர்வு மிகவும் அவசியம். அவர்களுக்கு சேமிப்பு, செலவு மற்றும் பட்ஜெட் போட்டு அதற்குள் எப்படி வாழவேண்டும். சிக்கனத்தின் அவசியம் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிடவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக அறிவார்ந்த முடிவுகளை எடுக்க மட்டும் கற்றுக்கொடுக்கவேண்டும். தேவைக்கும், விருப்பத்திற்கும் உள்ள வித்யாசங்களை நீங்கள் உணர்த்திவிட்டாலே போதும். அவர்கள் சரியாக பொருளாதார முடிவுகளை எடுக்க வலியுறுத்தும்.
சரியான அளவு திரைநேரம்
தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு எல்லைகளை வகுக்கவேண்டும். இது உங்கள் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு ஊக்குவிக்கும். அவர்களுக்கு படிக்கக் கற்றுக்கொடுங்கள் அல்லது கிரியேட்டிவான பழக்கவழக்கங்களை செய்யவும் அறிவுறுத்துங்கள். இதனால் அவர்களின் திரை நேரம் குறைந்து, அவர்கள் தங்களின் நேரத்தை சரியான முறையில் செலவிடுவார்கள்.
ஆரோக்கியமான எல்லைகள்
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எல்லைகளை வகுப்புது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்குவது முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள இது உதவும். அவர்கள் சரியான விஷயங்களை தேர்ந்தெடுக்கவும் இது உதவும்.
அன்பும், அனுதாபமும்
உங்கள் குழந்தைகளுக்கு அன்பின் ஆற்றல் என்னவென்பதை கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு அதை செயல்கள் மூலமாக சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்கு இரக்கத்துடனும், அனுதாபத்துடனும் இருக்க கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இரக்கமானவர்களாகவும், மற்றவர்களின் துன்பங்களை உற்றுநோக்குபவர்களாகவும் இருப்பார்கள்.
விடாமுயற்சி
உங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் எழுவது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களின் பின்னடைவுகளில் இருந்து தொடர்ந்து முன்னேறி சென்றுகொண்டேயிருப்பார்கள். உங்கள் குழந்தைகளை வாழ்வின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள முனைவார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்