தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (01.05.2024): 'உழைப்பே உயர்வு'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (01.05.2024): 'உழைப்பே உயர்வு'..மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 01, 2024 05:45 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 01) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மே 1ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மே 1ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடிவரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்களின் வழியில் காரிய அனுகூலம் உண்டு. நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மிதுனம்

திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். வியாபார ஒப்பந்தங்களில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்

குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் சென்று வருவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்.

கன்னி

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணி நிமிர்த்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

துலாம்

விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மனை விருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

தனுசு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தனவருவாயில் இருந்துவந்த ஏற்ற, இறக்கமான சூழல் குறையும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதில் மாற்றம் பிறக்கும்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்கள் செல்வதற்கான சூழல் ஏற்படும். உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். எதிர்ப்பு குறையும் நாள்.

மீனம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும்  / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்