Top 10 Tamil News : முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய முதல்வர் உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ!
தேவர் குரு பூஜையையொட்டி முத்துராம லிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தியது முதல் தங்கம் உயர்வு வரை தமிழகத்தின் இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
தேவர் குரு பூஜையையொட்டி முத்துராம லிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தியது முதல் தங்கம் உயர்வு வரை தமிழகத்தின் இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர்
குரு பூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காலிப்பணியிங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு
அரசு பேருந்து கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
களை கட்டிய ஆட்டு சந்தை - சில மணி நேரங்களில் 3 கோடி!
உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை முதல் நடைபெற்றுவரும் ஆட்டுச் சந்தையில் சில மணிநேரங்களிலேயே ரூ. 3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்று தீர்ந்தது.
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கும் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் ரயில்களில் ஏறி, ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ரயில்வே காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கௌதமிக்கு ஜெயக்குமார் வாழ்த்து!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கௌதமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன்
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை கிடு கிடு உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.59, 520க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7, 440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதய நிதி ஸ்டாலின்
நம்முடைய SportsTN (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு SportsTN சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.75க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியானதால் வாகன ஓட்டிகளிடேயே பெரும் எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.
கங்குவா படத்தொகுப்பாளரான நிஷாத் யூசூஃப் மரணம்
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் அட்வெண்ச்சர் பேண்டஸி திரைப்படமான கங்குவா நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் பம்பரமாக சுழன்று ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் கங்குவா படத்தின் படத்தொகுப்பாளரான நிஷாத் யூசூஃப் மரணம் அடைந்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதாகும் நிஷாந்த் யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
தமிழகம் தொடர்பான பல செய்திகளை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்க
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்