மளமளவென உடல் எடை குறைய வேண்டுமா? கடகடவென தினமும் காலையில் பருகவேண்டிய பானங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மளமளவென உடல் எடை குறைய வேண்டுமா? கடகடவென தினமும் காலையில் பருகவேண்டிய பானங்கள்!

மளமளவென உடல் எடை குறைய வேண்டுமா? கடகடவென தினமும் காலையில் பருகவேண்டிய பானங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 06, 2024 05:30 PM IST

உடல் எடையைக் குறைக்க காலையில் பருகவேண்டிய பானங்கள்.

மளமளவென உடல் எடை குறைய வேண்டுமா? கடகடவென தினமும் காலையில் பருகவேண்டிய பானங்கள்!
மளமளவென உடல் எடை குறைய வேண்டுமா? கடகடவென தினமும் காலையில் பருகவேண்டிய பானங்கள்!

காலையில் நீங்கள் இந்த பானங்களை பருகினால் அது உங்களின் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும்.

இடுப்பில் உள்ள சதையை குறைக்கும் வல்லமை கொண்டது எலுமிச்சை பழத்தண்ணீர், உடலை சுத்தம் செய்கிறது, கொழுப்பை எரிக்கிறது, உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால் உடல் எடை குறையும். இதை காலை எழுந்தவுடனும், இரவு உறங்கச் செல்லும் முன்னரும் பருகவேண்டும்.

சீரகத்தண்ணீர்

சீரகத்தில் தைமோகுனைன்கள் உள்ளது. இது இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி, நாள் முழுவதும் தண்ணீர் பருக நினைக்கும்போதெல்லாம் பருகவேண்டும். இதனால் உங்கள் எடை குறைவதுடன், உங்களின் செரிமானம் நன்றாக நடைபெறும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உங்கள் உடலுக்கு நன்மையைத் தரும். உடல் வளர்சிதைக்கும் உதவும்.

மோர்

வெயில் காலத்தில் மோர் சிறந்தது. வெயில் காலத்தில் உடல் இழக்கும் நீர்ச்சத்தை மீட்டுத்தரும் பானம். இது தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கும் மாயமும் செய்யும். இதில் உள்ள வைட்டமின் பி 12 உடல் ஊட்டச்சத்துக்களை நன்முறையில் உறிஞ்ச உதவுகிறது. தயிரை கடைந்து தண்ணீர் சேர்த்து வறுத்து பொடித்த சீரகப்பொடி அரை ஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்து காலையில் எழுந்தவுடன் வெறுத் வயிற்றில் பருகவேண்டும்.

பட்டை தேநீர்

ஒரு டம்ளர் தண்ணீரில் 2 துண்டு பட்டையைப்போட்டு அதன் சாறுகள் இறங்கியவுடன், வடிகட்டி தேன் கலந்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் காணாமல் போய்விடும். இதை நீங்கள் மாலையிலும் பருகலாம். இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இதில் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

கிரீன் டீ

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கிரீன் டீ உதவும். இது எண்ணற்ற நன்மைகளை உடலுக்குக் கொடுக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதை தயாரிப்பதும் எளிது.

இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொன்றையும் ஒரு மாதம் செய்து பார்த்துவிட்டு, எது அதிக பலன் தருகிறது என்பதை தேர்ந்தெடுத்து அதை தொடர்ந்து செய்யவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.