சருமத் தேமல் மறைய, வெடித்த உதடு சீராகி பளபளக்க வேண்டுமா? இதோ எளிய சித்த மருத்துவ தீர்வுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சருமத் தேமல் மறைய, வெடித்த உதடு சீராகி பளபளக்க வேண்டுமா? இதோ எளிய சித்த மருத்துவ தீர்வுகள்!

சருமத் தேமல் மறைய, வெடித்த உதடு சீராகி பளபளக்க வேண்டுமா? இதோ எளிய சித்த மருத்துவ தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 01:20 PM IST

சில சித்த மருத்துவக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி பலன்பெறுங்கள்.

சருமத் தேமல் மறைய, வெடித்த உதடு சீராகி பளபளக்க வேண்டுமா? இதோ எளிய சித்த மருத்துவ தீர்வுகள்!
சருமத் தேமல் மறைய, வெடித்த உதடு சீராகி பளபளக்க வேண்டுமா? இதோ எளிய சித்த மருத்துவ தீர்வுகள்!

சில சித்த மருத்துவ குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை என்னவென்று பார்க்கலாம்.

தேமல்

உங்களுக்கு சருமத்தில் தேமல் ஏற்பட்டால் அதற்கு பூண்டு மற்றும் வெற்றிலை இரண்டையும் நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதை தினமும் சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

வறட்டு இருமல்

தேனையும், எலுமிச்சை பழத்தின் சாற்றையும் சமஅளவு எடுத்து தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலையின் சாற்றை ஆலிவ் எண்ணெயில் காய்ச்சி, அதை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தினமும் மறையும் வரை பூசவேண்டும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடித்து தினமும் காலை மற்றும மாலை என இருவேளையும் உணவுக்குப்பின்னர் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

உதடு வெடிப்பு

கரும்புச்சக்கையை எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெயை கலந்து உதட்டில் தடவிவந்தால் உதட்டு வெடிப்புக்கள் குணமாகி பளபளக்கும் உதடுகள் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த சித்த மருத்துவக்குறிப்புக்களை நீங்கள் பின்பற்றி பலன்பெறலாம். இவையெல்லாம் உங்களுக்கு வீட்டிலே எளிதாக கிடைக்கக்கூடிய தீர்வுகள் ஆகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.