எண்ணெயில்லை; அடுப்பும் தேவையில்லை; பசு மஞ்சள் லட்டு! பெண்களுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எண்ணெயில்லை; அடுப்பும் தேவையில்லை; பசு மஞ்சள் லட்டு! பெண்களுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரும்!

எண்ணெயில்லை; அடுப்பும் தேவையில்லை; பசு மஞ்சள் லட்டு! பெண்களுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரும்!

Priyadarshini R HT Tamil
Nov 25, 2024 04:14 PM IST

பசு மஞ்சள் லட்டு செய்வது எப்படி என்று பாருங்கள்.

எண்ணெயில்லை; அடுப்பும் தேவையில்லை; பசு மஞ்சள் லட்டு! பெண்களுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரும்!
எண்ணெயில்லை; அடுப்பும் தேவையில்லை; பசு மஞ்சள் லட்டு! பெண்களுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரும்!

இதை வழக்கமாக உணவில் எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நீண்ட காலமாக உள்ள வீக்கங்களை குறைக்க உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் குடல் வீக்க நோய் ஆகியவற்றை தடுக்கிறது. செல்கள் இறக்க காரணமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஃப்ரீரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. அல்சீமர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பசு மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. குர்குமினில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. பசு மஞ்சள் பாரம்பரியமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. செரிமான என்சைம்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இயற்கை வலி நிவாரணம் கொடுக்கின்றன. பசு மஞ்சளை தினமும் எடுத்துக்கொள்வது, நாள்பட்ட வலியை போக்குகிறது.

பசு மஞ்சளில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் சருமத்துக்கு நன்மை கொடுக்கிறது. முகப்பருக்களை நீக்க உதவுகிறது. சொரியாசிஸ், ஈசிமா போன்ற சரும வியாதிகளையும் குணப்படுத்துகிறது. பசு மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் உட்பொருட்கள், உங்கள் உடலில் உள்ள எதிர்ப்பாற்றலை பலப்படுத்த உதவுகிறது. இதன் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள், உடலில் நோய் எதிர்ப்புத்திறனுக்கு உதவுகிறது. இதனால் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. நீரிழிவை குணப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பசுமஞ்சள் உதவுகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பசு மஞ்சளில் லட்டுகள் செய்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதுவும் எண்ணெய் இல்லாத மற்றும் அடுப்பில்லாத சமையல் ஆகும்.

தேவையான பொருட்கள்

பசு மஞ்சள் – 100 கிராம் (தோல் நீக்கி துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்)

தேங்காய் துருவல் – ஒரு கப்

அவல் பொடி – 2 ஸ்பூன்

பாதாம் பொடி – 6 டேபிள் ஸ்பூன்

கடலைப் பொடி – 6 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பொடி – 6 டேபிள் ஸ்பூன்

பிஸ்தா பொடி – 6 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்

தர்பூசணி அல்லது பரங்கிக்காய் விதை – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய பசு மஞ்சள், தேங்காய், பொடித்த அவல், பாதாம், முந்திரி, பிஸ்தா, கடலை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து சிட்டிகை ஏலக்காய், எள் மற்றும் விதைகளை அப்படியே சேர்த்து பிசைந்து லட்டுகளாக பிடித்துக்கொள்ளவேண்டும்.

இதை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள ஆரோக்கிய நற்குணங்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதால், பெண்கள் இந்த லட்டுக்களை அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.