Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா - தேங்காய் சட்னி! சிறப்பான காலை உணவு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா - தேங்காய் சட்னி! சிறப்பான காலை உணவு!

Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா - தேங்காய் சட்னி! சிறப்பான காலை உணவு!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2023 03:30 PM IST

Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா, தேங்காய் சட்னி. சிறப்பான காலை உணவு.

Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா - தேங்காய் சட்னி! சிறப்பான காலை உணவு!
Villupuram Upma : வித்யாசமான சுவை கொண்ட விழுப்புரம் உப்புமா - தேங்காய் சட்னி! சிறப்பான காலை உணவு!

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

பெருங்காய பொடி – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 5 கப்

தேங்காய் சட்னி அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் – அரை கப்

பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 3 பல்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 1 கப்

தாளிக்க

எண்ணெய் – 1 ஸ்பூன

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

அடிக்கணமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி ரவையை வறுக்க வேண்டும். பொன்னிறமாகும் வரை குறைவான தீயில் வைத்து வறுக்கவேண்டும். ரவை வறுபட்டவுடன் நல்ல வாசம் வரும் அதை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும், 4 கப் சூடான தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

இந்த கலவை கொதிக்கும்போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக கிளறிக்கொண்டே ரவையை சேர்க்க வேண்டும்.

தீயை குறைத்து 10 நிமிடங்கள் வேகவைத்தபின்னர், தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

தேங்காய் சட்னி அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய், வர மிளகாய், பூண்டு, பொட்ககடலை என அனைத்தையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தண்ணீர் சேர்த்து, சட்னியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை சூடாக்கி எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் உப்புமா, தேங்காய் சட்னி இப்போது சாப்பிட தயாராக உள்ளது.

உப்புமா தமிழகத்தின் பிரதான காலை உணவு. இதை வெறும் ரவை மட்டும் சேர்த்து தென்னிந்தியாவில் செய்வார்கள். வட இந்தியாவில் காய்கறிகளுடன் ரவை சேர்த்து செய்வார்கள். இந்த உப்புமா விழுப்புரத்தில் மட்டுமே செய்யப்படும் ஸ்பெஷல் உப்புமா.

இந்த உப்புமா கிரீமியாகம், மிருதுவாகவும் இருக்கும். இந்த உப்புமா குறிப்பாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் விற்கப்படும். ரயில் பயணிகளுக்கு ஹாட் பாக்ஸில் இருந்து சுடச்சுட எடுத்து, அதன் மேல் தேங்காய் சட்னி ஊற்றி கொடுப்பார்கள். 

அவர்கள் பரிமாறும்விதமே பார்ப்பவர்களை சாப்பிட தூண்டும். உப்புமா பிடிக்காதவர்கள் நிறைய பேர் உண்டு, அவர்களும் கூட இந்த விழுப்புரம் உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.