தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vetrilai Rasam: சளி இருமல் தொண்டை வலிக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்!

vetrilai rasam: சளி இருமல் தொண்டை வலிக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 15, 2023 10:30 AM IST

பொதுவாக காய்ச்சல், சளி, இருமல் இருக்கும் போது ரசம் ஒரு இதமான உணவாக பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு வெற்றிலை ரசம் வைத்து கொடுத்தால் நெஞ்சில் கட்டிய சளியை சரி செய்யும்.

வெற்றிலை ரசம்
வெற்றிலை ரசம்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வெற்றிலை

நல்லெண்ணெய்

மிளகு

சீரகம்

வெந்தயம்

பூண்டு

மல்லி விதை

தக்காளி

கறிவேப்பிலை

மல்லி

வரமிளகாய்

புளி

பெருங்காயம்

மஞ்சள்தூள்

உப்பு

செய்முறை

ஒரு மிக்ஸியில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லி விதை, 6 பூண்டு, 3 காம்பு நீக்கிய வெற்றிலை ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். இதையடுத்து அரை ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் இரண்டு வரமிளாகாயை கிள்ளி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். இதில் 2 பெரிய பழுத்த தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான உப்பை சேர்த்து வதக்க வேண்டும். இதையடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்த மிளகு, சீரக பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் ரசம் முறை கட்டி வரும்போது அதில் ஒரு நான்கு வெற்றிலையை குட்டி குட்டியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.சிறிதளவு மல்லித்தழையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

சூடான சாதத்தில் வெற்றிலை ரசத்தை சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல், காய்ச்சல் தலைவலி என போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது வெற்றிலை ரசம் சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும்.

பொதுவாக வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயு பிரச்சனையை தடுக்க உதவும். மேலும் மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும். குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர ஞாபக சக்தியை அதிகரிக்கும். குறிப்பிட்ட அளவில் வெற்றிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்