தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vallarai Keerai Soup : ஞாபக சக்தியை அதிகரிக்கும்! தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்! வல்லாரை கீரை சூப்!

Vallarai Keerai Soup : ஞாபக சக்தியை அதிகரிக்கும்! தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்! வல்லாரை கீரை சூப்!

Priyadarshini R HT Tamil
Sep 23, 2023 12:33 PM IST

வல்லாரை கீரையில் ஈசியான சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?
வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

பூண்டு – 2 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

சீரகம் – அரை ஸ்பூன்

நெய் – 1 ஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

பாசிபருப்பு – 1 கரண்டி (வேகவைத்து மசித்தது)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

வல்லாரை கீரை, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அரைத்து வைத்த விழுதுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாராளமாக தண்ணீர் விட்டு, நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

வேகவைத்து மசித்த பாசிபருப்பையும் அதில் சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்க்கவேண்டும். உங்கள் காரத்தின் அளவுக்கு ஏற்ப இப்போது மிளகுத்தூளையும் சேர்க்க வேண்டும்.

கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும். சூடான, சுவையான, மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை கீரை சூப் தயாராகிவிட்டது.

வல்லாரை கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளிக்கும் மருந்தாகிறது. உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சரும பராமரிப்புக்கும் உதவுகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற சரும நோய்களையும் குணமாக்குகிறது. 

வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு உணவில் இதை அடிக்கடி சேர்த்தால், அது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

குறிப்பாக தேர்வு காலங்களில் உணவில் குழந்தைகளுக்கு வல்லாரை கீரையை சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தேர்வுக்கு படித்த அனைத்தும் நினைவில் நிற்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்