Palm Oil: ‘ரேஷன் கடை பாமாயில் மூலம் உணவு சமைப்பது ஆரோக்கியமா? ஆபத்தா?’ மருத்துவர் சொல்லும் உண்மை இதோ!
”ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்ட பாலி அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிக் (Poly unsaturated fat) தேங்காய் எண்ணெயில் 5 சதவீதம் உள்ளது. ஆனால் இதுவே பாமாயிலில் 10 முதல் 15 சதவீதமும், கடலை எண்ணெயில் 30 முதல் 40 சதவீதமும் உள்ளது”
நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. இயற்கைக்கு திரும்பும் நோக்கில் பலரும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களை பலரும் உபயோகிக்கத் தொடங்கி உள்ளனர்.
அதே வேளையில் ஏழைகள் முதல் கீழ்நடுத்தர வர்க்கம் வரை பயன்படுத்தும் எண்ணெய்களில் பாமாயில் தவிர்க்க முடியாதாதாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பிரபல பிஸ்கெட் நிறுவனங்கள் கூட அதன் தயாரிப்பில் பாமாயிலை பயன்படுத்துகின்றனர்.
பாமாயில் ஆரோக்கியம் அற்றது என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் அது உண்மையா என்பது குறித்து அறிவியல் ரீதியான கருத்துக்களை உணவுக்கட்டுப்பாட்டு நிபுணர் ஆன மருத்துவர் அருண்குமார் விளக்குகிறார்.
உலக அளவில் மொத்த எண்ணெய் உற்பத்தில் பாமாயில் 40 சதவீத பங்கை வகிக்கிறது. சிவப்பு நிறத்தில் உள்ள பழத்தில் இருந்து பாமாயில் கிடைக்கிறது. இதில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் என்றும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் என்றும் இரண்டுவிதமாக இவை கிடைக்கிறது.
பாமாயிலில் 45 சதவீதம் பால்மெட்டிக் ஆசிட் என்று சொல்லக்கூடிய நிறை கொழுப்பு உள்ளது. மீதம் உள்ள 40 சதவீதம் ஒலியிக் ஆசிட் என சொல்லக்கூடிய நிறைவுறாக் கொழுப்பு உள்ளது. இதுமட்டுமின்றி 5 சதவீதத்திற்கும் குறைவாக ஸ்டியரிக் ஆசிட், லினோலிக் ஆசிட் ஆகியவை உள்ளது.
நிறைக்கொழுப்பு என்பதே மிகவும் ஆபத்தானது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் தேங்காய் எண்ணெயில் 90 சதவீதம் நிறைக் கொழுப்பு உள்ளது. நெய் மற்றும் வெண்ணெயிலும் நிறை கொழுப்பு உள்ளது.
பாமாயில் விரைவில் கெட்டியாக கூடிய தன்மை உள்ளதால் அதை பிரிக்க ஒலியிக் ஆசிட் என்று சொல்லக்கூடிய நிறைவுறாக் கொழுப்பை அதிகப்பட்டுத்திவிடுவார்கள். அதனை பாம்ஒலி என்று சொல்வார்கள். அதனை நாம் பாமாயில் என்று பயன்படுத்தி வருகிறோம்.
அதிக நிறைக்கொழுப்புகளை கொண்டு உள்ளதால் தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் கெட்டியாகிவிடும். ஆனால் அதில் நிறைவுறாக் கொழுப்பு இருந்தால் அது கெட்டி ஆகாது.
பாம்ஒலின் என்று சொல்லக்கூடிய எண்ணெய்யைத் தான் பாமாயில் என்று நாம் பயன்படுத்துகிறோம்.
தேய்ங்காய் எண்ணெயில் 92 சதவீதம் நிறைக் கொழுப்புக்கள் உள்ளது. ஆனால் அதில் லாரிக் ஆசிட் உள்ளிட்ட ஆரோக்கியமான கொழுப்புக்கள்தான் உள்ளது. இதனால் இவை ஆரோக்கியமானது என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன.
கடலை எண்ணெயில் 15 முதல் 20 சதவீதம் நிறைக் கொழுப்பு (Saturated fat) உள்ளது. பாமாயிலில் இந்த நிறை கொழுப்பு 40 சதவீதம் உள்ளது.
மிகுந்த ஆரோக்கியாமனது என கூறப்படும் மோனோ அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிட் (Mono unsaturated fat) தன்மை தேங்காய் எண்ணெயில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் பாமாயில் மற்றும் கடலை எண்ணெயில் 40 முதல் 45 சதவீதம் வரை உள்ளது.
ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்ட பாலி அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிக் (Poly unsaturated fat) தேங்காய் எண்ணெயில் 5 சதவீதம் உள்ளது. ஆனால் இதுவே பாமாயிலில் 10 முதல் 15 சதவீதமும், கடலை எண்ணெயில் 30 முதல் 40 சதவீதமும் உள்ளது.
பாமாயில் கொலஸ்டாரலை அதிகம் ஏற்படுத்தும் என்று எந்த அராய்ச்சிகளிலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். மக்கள் பயப்படும்படி பாமாயில் அந்த அளவுக்கு கெடுதல் கிடையாது. சுத்திகரிக்கப்பட்டு பாமாயில் வருகிறது. அப்படி செய்யும் போது சில கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
டாபிக்ஸ்