Groundnut Oil: கடலை எண்ணெய் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்தால் இன்றே பயன்படுத்தத் தொடங்குவீர்கள்!-if you know these facts about peanut oil you will start using it from today - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Groundnut Oil: கடலை எண்ணெய் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்தால் இன்றே பயன்படுத்தத் தொடங்குவீர்கள்!

Groundnut Oil: கடலை எண்ணெய் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்தால் இன்றே பயன்படுத்தத் தொடங்குவீர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 28, 2024 09:16 AM IST

நிலக்கடலை எண்ணெயில் சமைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்போது பெரும்பாலும் அனைவரும் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துகின்றனர். கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

கடலை எண்ணெய் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்தால் இன்றே பயன்படுத்தத் தொடங்குவீர்கள்!
கடலை எண்ணெய் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்தால் இன்றே பயன்படுத்தத் தொடங்குவீர்கள்! (Pixabay)

இப்போது சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரன் ஆயில் வந்த பிறகு நிலக்கடலை எண்ணெயைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் ஒரே மாதிரியான எண்ணெய்க்கு பதிலான எண்ணெய்களை சுழற்சி முறையில் நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால்.. இன்றே பயன்படுத்தத் தொடங்கலாம்.

கடலை எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற சத்துக்களும் கிடைக்கின்றன. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன, இதனால் உடல் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வேர்க்கடலை எண்ணெய் தோல் ஆரோக்கியம், நரம்பு செயல்பாடு மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு அவசியமாகும்.

மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது நிலக்கடலை எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தினாலும் அது எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் சில வகையான எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தினால்.. அந்த எண்ணெயில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. ஆனால் கடலை எண்ணெயை அதிக வெப்பநிலையில் வைத்திருந்தாலும் அது தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்காது. எனவே டீப் ஃப்ரை உணவுகள் செய்யும் போது கடலை எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நிறைவுற்ற கொழுப்பில் மிகவும் மிதமானது. மேலும் கொழுப்பு அமிலங்கள் சமநிலையில் உள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள் இதில் உள்ளன. எனவே உங்கள் இதயத்திற்கு நிலக்கடலை எண்ணெய் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.

இதைப் பயன்படுத்துவதன் மூலம், சருமம் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. சருமத்தை பளபளப்பாக்கி, முடியை வலுவாக்கும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். இது குறைந்த கொலஸ்ட்ரால் அளவைக் கொண்டுள்ளது. குறிப்பாக நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. எனவே உங்கள் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

வயிறு ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் நல்ல காரியத்தைச் செய்ய முடியும். நிலக்கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராது. மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சிக் கொள்கிறது. அதனால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

கடலை எண்ணெயை இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தலாம். உடலையும் தலையையும் அவ்வப்போது மசாஜ் செய்வது நல்லது.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.