Tuberculosis and Economy : காசநோய் பாதித்தோருக்கும் ஏற்படும் பொருளாதார இழப்புகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Tuberculosis and Economy : காசநோய் பாதித்தோருக்கும் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் என்ன?
George institute for Global Health, New Delhi, Indira Gandhi Government Medical College, (Nagpur), London School of Hygiene and Tropical Medicine (UK) இணைந்து 4 மாநிலங்களில் (அஸ்ஸாம், மாகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மேற்குவங்காளம்) மார்ச் 2019-செப்டம்பர் 22 இடைப்பட்ட காலத்தில் 1,482 காசநோயாளிகளை ஆய்வு செய்ததில், 30-61 சதவீத காசநோயாளிகள், காசநோய் கண்டறிவதற்கு முன்னர் கிடைத்த ஆண்டு வருமானத்தைவிட, 20 சதவீதத்திற்கு மேல் வருமானக் குறைவு ஏற்பட்டு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
காசநோய் ஆய்வு
காசநோய் கண்டறிவதில் ஏற்படும் காலதாமதம், நோய் பாதிப்பால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக நீண்டநாள் சிகிச்சையின்போது ஏற்படும் பணியிழப்பு, இவையே பொருளாதார இழப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
ஆய்வில்,
529 பேர் - பொதுமக்கள் (General Population),
526 பேர் - நகர்ப்புற சேரி மக்கள்,
427 பேர் - தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிப்பவர்கள்,
118 காசநோய் சிகிச்சை மையங்கள்,
16 மாவட்டங்களில் உள்ள 182 தேயிலைத் தோட்டங்களிலிருந்து மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் PLOS Global Public Health ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
காசநோயாளிகளுக்கு ஏற்படும் செலவுகள்
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு காசநோய் பாதிப்பு உறுதிசெய்யப்படுவதற்கு முன்னரே, தாமதமான நோய் (TB) கண்டறிதலால், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
காசநோய் உறுதிபடுத்தப்படுவது சராசரியாக 7-9 வாரங்கள் தாமதமாகிறது. இது வழக்கத்தை விட 2 மடங்கு காலதாமதம் அதிகம் என்றும், நோய் கண்டறிதலுக்கு ஒருவர் 8-11 முறை பல்வேறு மருத்துவமனை அல்லது மருத்துவர்களை அணுக வேண்டியுள்ளதால் ஏற்படும் பயணச் செலவு, பரிசோதனைகள் செலவு, மருத்துவர் கட்டணம் என பொருளாதார இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
காசநோய் பாதிப்பில், நுரையீரல் பாதிப்பு தவிர்த்து பிற உறுப்புகளில் (உ.ம்.செரிமான மண்டலம், இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்பு) காசநோய் உறுதிபடுத்தும் ஆய்வுகள் அரசுத்துறையில் இல்லாததால், தனியார் ஆய்வகங்களுக்குச் சென்று உறுதிபடுத்த வேண்டியுள்ளதால் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
காசநோய் சிகிச்சைக்கு ஏற்படும் செலவுகள்
சொந்த செலவில் சிகிச்சை மேற்கொள்வதால்,
பொதுமக்கள் - ரூ.32,829-34,315
நகர்ப்புற சேரி மக்கள் - ரூ.30,782-30,806
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் - ரூ.22,981-29,960 என செலவிடவேண்டியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.(
Human Capital Approach) Output Approach முறையில், உடல்நலக்குறைவால் ஏற்படும் வருமானக் குறைவால், சிகிச்சைக்கு
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ரூ.30,347,
நகர்ப்புற சேரி மக்கள் ரூ.57,992,
பொதுமக்கள் ரூ.61,181
செலவிடும் கட்டாயம் உள்ளது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புற சேரி மக்கள் காசநோய் கண்டறிவதற்கு முன், ஆண்டு வருமானம் ரூ.50,000-2,50,000 என்ற அளவில் இருந்துள்ளது என்றும், காசநோய் சிகிச்சைக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000-ரூ.1,00,000 வரை செலவாகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் 5-6 மாத கால சிகிச்சையின்போதும், சிகிச்சை முடிந்து ஓராண்டு ஆகிய பின்னரும் நேரடியாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள், நகர்ப்புற சேரி மக்களில் 71-75 சதவீதம் பேர், காசநோய் அறிகுறிகள் தொடங்கியது முதல், நோய் கண்டறிதல் வரை தனியார் மருத்துவர்களை மட்டுமே நாடியுள்ளதால், காசநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து (கால தாமதம் இல்லாமல்) உரிய சிகிச்சையை இலவசமாக அளிக்க, தனியார் மருத்துவர்களுடன் இணைந்து அரசு பணியாற்ற ஆக்கபூர்வத் திட்டங்களை உடனடியாக வகுக்க வேண்டும்.
சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் திட்டங்களை (Reimbursement of expenses) உருவாக்கி, சிகிச்சைக்கான செலவை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்க முன்வர வேண்டும்.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளதால், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கி, சிகிச்சைக்கு ஆகும் செலவை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப அளிப்பது மட்டுமே, அவர்களுக்கு காசநோயால் ஏற்படும் பொருளாதார இழப்பீடுகளைக் குறைத்து, அவர்களை பாதிப்பிலிருந்து மீட்டு, அரசின் கடமையான மக்களின் சுகாதாரத்தை பேணிகாப்பதை உறுதிபடுத்த முடியும்.
பரந்தூர் விமானநிலையப் பகுதியில் வருவாய் ஏடுகளின் படியும், விமானநிலைய சாத்தியக்கூறுகள் அறிக்கை (Pre-feasibility Studies) ப்படியும், நீர்நிலைகளின் பரப்பு 26.4 சதவீதம் என இருக்க, சுற்றுச்சூழல் அனுமதிக்காக தமிழக அரசு அளித்த அறிக்கையில், நீர்நிலைகளின் பரப்பு வெறும் 6 சதவீதம் என குறைத்துக் காட்டுவது, அரசு பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை காட்டாத நிலையே உள்ளதால் அல்லது தொடர்வதால், அப்பகுதி மக்கள் ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு குடிபுக இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மற்றும் இந்திய அரசுகள் மக்கள் நலனில் அக்கறை காட்ட முன்வருவது எப்போது?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்