Ind vs Can Preview: இந்திய அணியில் மாற்றம்! கோலிக்கு கடைசி வாய்ப்பு - மழை பாதிப்புக்கு நடுவே சவால்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Can Preview: இந்திய அணியில் மாற்றம்! கோலிக்கு கடைசி வாய்ப்பு - மழை பாதிப்புக்கு நடுவே சவால்

Ind vs Can Preview: இந்திய அணியில் மாற்றம்! கோலிக்கு கடைசி வாய்ப்பு - மழை பாதிப்புக்கு நடுவே சவால்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 07:00 AM IST

கடைசி லீக் போட்டி என்பதால் கனடாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம். சூப்பர் 8 சுற்றுக்கு முன் பார்மை மீட்டெடுக்க கோலிக்கு கடைசி வாய்ப்பு ஆக இந்த போட்டி அமைகிறது. மழை பாதிப்புக்கு நடுவே சவால் ஆக அவருக்கு அமைந்துள்ளது

இந்திய அணியில் மாற்றம், சூப்பர் 8 சுற்றுக்கு முன் பார்முக்கு திரும்ப கோலிக்கு கடைசி வாய்ப்பு
இந்திய அணியில் மாற்றம், சூப்பர் 8 சுற்றுக்கு முன் பார்முக்கு திரும்ப கோலிக்கு கடைசி வாய்ப்பு

இந்த போட்டி தொடங்கும் முன் இந்தியா 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. கனடா அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, யுஎஸ்ஏ அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. டாப் அணிகளான நியூசிலாந்து, இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னர் கடைசி லீக் ஆட்டமாக இந்தியா - கனடா மோதும் போட்டி அமைந்திருப்பதால் இந்திய அணியில் முக்கிய வீரருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் குல்தீப் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

கோலி பார்மை மீட்டெடுக்க வாய்ப்பு

டி20 உலகக் கோப்பை 2024 தொடர், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு இதுவரை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் 4, இரண்டாவது போட்டியில் 1, மூன்றாவது போட்டியில் கோல்டன் டக் அவுட் என இதுவரை இல்லாத அளவில் மிகவும் மோசமான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

பார்ம் இல்லாமல் தவித்து வரும் அவருக்கு, இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சூப்பர் 8 சுற்று போட்டிகளுக்கு முன்பு தனது பார்மை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் கோலி இருந்து வருகிறார்.

இன்றைய போட்டி நடைபெற இருக்கும் புளோரிடா மைதானத்திலும் கோலி பெரிதாக சாதித்தது இல்லை. இதுவரை இங்கு விளையாடிய 3 இன்னிங்ஸில் 63 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். எனவே கோலியின் திறமைக்கு சவால் அளிக்கும் விதமாக கனடாவுக்கு எதிரான ஆட்டம் அமையவுள்ளது.

கதிகலங்க வைத்த கனடா

இந்த தொடரில் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்விகளை சந்தித்த போதிலும் கனடா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி கலங்கடித்துள்ளது என்றே கூறலாம்.

முதல் போட்டியில் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக 194 ரன்கள் குவித்தது. அடுத்து அயர்லாந்துக்கு எதிராக லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் த்ரில் வெற்றியை பெற்றது.

இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 106 ரன்கள் என மிக குறைவான ஸ்கோர் எடுத்தது. ஆனாலும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை 17வது ஓவர் வரை இழுத்து சென்று பாகிஸ்தான் அணியை கடினமான வெற்றியை பெற செய்தது.

எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி சவாலை தரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மழையால் பாதிப்பு

புளோரிடாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இங்கு நடைபெறுவதாக இருந்த இலங்கை - நேபாளம், யுஎஸ்ஏ - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு போட்டிகளிலும் விளையாட இருந்த அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், புளோரிடாவில் இன்று மழை தொடர்வதற்கு 80 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே மழையால் இந்த போட்டியும் தடைபட வாய்ப்பு உள்ளது.

புளோரிடா மைதானத்தில் இந்திய அணி இதுவரை

இந்தியா இங்கு 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா இங்கு 5 இன்னிங்ஸ் விளையாடி 196 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரர் லிஸ்டில் இருக்கிறார். அவர் 2 அரைசதம் இந்த மைதானத்தில் அடித்துள்ளார்.

அதேபோல் பவுலிங்கில் நான்கு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் டாப் பவுலராக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.