தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இறால் சுரைக்காய் தொக்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

இறால் சுரைக்காய் தொக்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 14, 2023 12:16 PM IST

இறால் சுரைக்காய் தொக்கு தோசைக்கு மிக ருசியாக இருக்கும்.

சுரைக்காய் இறால் தொக்கு
சுரைக்காய் இறால் தொக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சுரைக்காய்

இறால்

மஞ்சள் தூள்

பச்சை மிளகாய்

நிலக்கடலை

பூண்டு

சீரகம்

கடுகு உளுத்தம் பருப்பு

கறிவேப்பிலை

வெங்காயம்

கடலை எண்ணெய்

செய்முறை

சுரைக்காயை தோல் சீவி நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நிலக்கடலை 100 கிராம் ஒரு ஸ்பூன் சீரகம் 10 பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் கடலை எண்ணெய்யை சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும். 

அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

அதில் கால் கிலோ அளவு சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 6 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். இதில் சுரைக்காயை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.

சுரைக்காய் வெந்த பிறகு நிலக்கடலை சீரகம் பூண்டு பொடியை சேர்த்து கிளற வேண்டும். மீண்டும் அடுப்பை குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் மூடி போட்டு கிளறி விட வேண்டும். கடைசியாக ஒரு கைபிடி மல்லி இலையை சேர்த்து கிளறி விட வேண்டும். இந்த இறால் சுரைக்காய் தொக்கு தோசைக்கு மிக ருசியாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்