தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Traditional Fenugreek Halwa : பெண்களின் சிறந்த தோழி! பாரம்பரியமான, ஆரோக்கியமான வெந்தயக்களி – செய்வது எப்படி?

Traditional Fenugreek Halwa : பெண்களின் சிறந்த தோழி! பாரம்பரியமான, ஆரோக்கியமான வெந்தயக்களி – செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 26, 2023 11:04 AM IST

குறிப்பாக இது பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைக்கள், கர்ப்ப கால தொல்லைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. பெண்களின் இடுப்புக்கு வலு சேர்க்கிறது. இதனால் பேறு காலத்தில் பெண்களுக்கு உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆரோக்கியமான வெந்தயக்களி பாரம்பரியமான முறையில் செய்வது எப்படி?
ஆரோக்கியமான வெந்தயக்களி பாரம்பரியமான முறையில் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

அரிசி, வெந்தயம், உளுந்து கருப்பட்டி.

செய்முறை

அரிசி – அரை கப்

(சாப்பாட்டு அரிசியே சிறந்தது)

உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்

(வெள்ளை உளுந்தாக எடுத்துக்கொண்டால் அரிசியுடனே சேர்த்து ஊறவைத்துவிடலாம். கருப்பு உளுந்தாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால் தனியாக ஊறவைத்து அலசி, கொஞ்சம் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்)

வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்

மூன்றையும் நன்றாக அலசி சுத்தம் செய்து, 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

ஊறிய பின்னர், அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஊறவைத்த தண்ணீரையே அரைப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாவை மிகவும் தண்ணீராகவும் அல்லாமல், மிகவும் கெட்டியாகவும் அல்லாமல் ஒரு இடைநிலை பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு கப் கருப்பட்டியை சேர்த்து கருப்பட்டி நன்றாக கரைந்ததும், ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் மற்றொரு பாத்தித்தில் வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை கொதிக்கவைக்கவேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நன்றாக கிளறும்போது இடையில் கால் கப் நல்லெண்ணெய், (செக்கு எண்ணெய் சேர்த்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்) சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

நன்றாக கிளறி கெட்டியாக அது திரண்டு அல்வா பதத்துக்கு வரும். அதை ஒரு தட்டில் மாற்றி இடையில் குழிபோட்டு, நல்லெண்ணெய் ஊற்றி அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

பாரம்பரிய வெந்தயக்களி உடலுக்கு வெந்தயத்தின் நன்மைகளை அப்படியே வழங்கும் தன்மை கொண்டது.

குறிப்பாக இது பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைக்கள், கர்ப்ப கால தொல்லைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. பெண்களின் இடுப்புக்கு வலு சேர்க்கிறது. இதனால் பேறு காலத்தில் பெண்களுக்கு உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. வயிறு கோளாறுகளையும் சரி செய்கிறது. எனவே வெந்தயக்களி நமது முழு உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுவதால், வெந்தயக்களியை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்