பேலன்ஸ்ட் டயடின் டாப் 7 பெனிஃபிட்ஸ் : நாம் ஏன் சரிவிகித உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்? அதற்கான காரணங்களை பாருங்கள்!
பேலன்ஸ்ட் டயடின் டாப் 7 பெனிஃபிட்ஸ் என்னவென்று பாருங்கள். நாம் ஏன் சரிவிகித உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்? அதற்கான காரணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் ஏன் சரிவிகித உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சரிவிகித உணவுதான் காரணம். உங்களின் மனநிலையை மாற்றும், உங்களின் உடலின் திறனை அதிகரிக்கச்செய்யும் என சரிவிகித உணவுகள் உங்கள் உடலுக்கும் தரும் நன்தைகள் ஏராளம். எனவே இன்றைய பரபரப்பான காலத்துக்கு சரிவிகித உணவுகள்தான் உடலுக்கு அதிக தேவையான ஒன்றாகும். ஆனால் நாம் பரபரப்பான காலத்தில் அதை செய்கிறோமா என்றால், பெரும்பாலானோரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். எனினும், ஆரோக்கிய உணவு உட்கொள்வது நமது உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வையே மாற்றும் சரிவிகித உணவுகளின் பயன்களை தெரிந்துகொண்டு கட்டாயம் பலன்பெறுங்கள்.
உங்களுக்கு சரிவிகித உணவு கட்டாயம் தேவை. உங்கள் வாழ்வியல் தேவை என்றால் அது சரிவிகித உணவுதான். இது உங்கள் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பது முதல் உங்களின் மனத்தெளிவை அதிகரிப்பது வரை, நீங்கள் சரிவிகித உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது
நீங்கள் சரிவிகித உணவை உட்கொள்வதால், அது உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் சுவை அரும்புகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் முடியும், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கலாம்.
மன ஆரோக்கியம்
ஆரோக்கியமான மனம் என்பது தான் ஆரோக்கியமான உடலுக்கு அடித்தளமாக உள்ளது. அதற்கு நீங்கள் உங்கள் உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உங்கள் மூளை இயக்கம் மற்றும் மனநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், உங்களுக்கு பயம் மற்றும் பதற்றம் குறைகிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. உங்களுக்கு உணர்வு ரீதியான சமநிலையைத் தருகிறது.
உடல் ஃபிட்னஸ்க்கு வித்திடுகிறது
உங்கள் உடல் ஃபிட்டாக இருப்பதற்கு உணவு தேர்வு என்பது மிகவும் முக்கியமானது. சரிவிகித உணவில் அதிகம் புரதம், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கும். இவை உங்கள் தசைகளின் வளர்ச்சியை மட்டும் பாதிக்காது. இது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். கொழுப்பை குறைக்க உதவும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால், நீங்கள் கூடுதல் பயிற்சிகள் மேற்கொள்ள முடிகிறது. இது உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உறக்கம்
உணவுக்கும், உறக்கத்துக்கும் உள்ள தொடர்பை நாம் கண்டுகொள்வதேயில்லை. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு என்பது உங்களுக்கு உறக்கத்தை அளிக்கும் செரோட்டினின், மெலோடினின் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே காபி, சர்க்கரை, உறங்கச் செல்லும் முன் அதிக சாப்பாடு ஆகியவற்றை தவிர்த்தால், அது உங்களுக்கு அமைதியான உறக்கத்தை இரவில் தரும்.
உள்ளிருந்து பொலிவு
சரிவிகித உணவுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவையும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் ஆரோக்கிய கொழுப்புகளும் உங்கள் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது வயோதிகத்தை எதிர்த்து போராடுகிறது. சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது, சுருக்கங்களை தவிர்த்து உங்களுக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.
குடல் ஆரோக்கியம்
சரிவிகித உணவு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு, ப்ரிபயோடிக்ஸ்கள் மற்றும் ப்ரோபயோடிக்குகளும் உங்கள் வயிற்றில் ஆரோக்கியமான கிருமி வளர்ச்சிக்கு தேவை. அதுதான் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துகிறது.
எடை மேலாண்மை
சரிவிகித உணவு என்பது உடல் எடையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு, உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் உணவு ஆகியவை உங்களின் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளும் பழக்கத்தை குறைத்து உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை முறையைக் கொடுக்கும்.
எனவே சரிவிகித உணவு இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, உணர்வு சார் நலன்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு என உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் உங்களுக்கு உணவு மிகவும் முக்கியமாக உள்ளது. எனவே உங்கள் உணவு தேர்வுதான் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எனவே சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுங்கள்.
டாபிக்ஸ்