மெதுவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் கூறுவது என்ன? இதோ முழு விவரம்!
மெதுவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா? விரைவாக சாப்பிடுபவர்களை விட மெதுவாக சாப்பிடுபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவாகும் வாய்ப்பு குறைவு என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.

வேகம் நிறைந்த வாழ்கை காலகட்டத்தில் பலருக்கும் சாப்பிட கூட நேரம் கிடைப்பது இல்லை. பலரும் வேகமாக தங்களது உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இது நாளடைவில் மிகப்பெரிய பிரச்னைகளை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மெதுவாக சாப்பிடுவது ஏன் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை மருத்துவர் விளக்குகின்றனர். "வேகமாக சாப்பிடுபவர்களை விட மெதுவாக சாப்பிடுபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய் அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பு நான்கு மடங்கு குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி வலுவாக காட்டுகிறது., நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகின்றனர்.
உங்களுக்கு சாப்பிடும் உணவு பிடிக்கிறதோ, இல்லையோ ஆனால் அதனை நீங்கள் நிதானமாக உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது மருத்துவர்கள் கூற்றாக உள்ளது.
