அப்பப்பா! எண்ணிப் பார்க்க முடியாத அளவு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பிரியாணி இலைகள்!
எண்ணிப் பார்க்க முடியாத அளவு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பிரியாணி இலைகள் உணவில் சேர்க்கப்படுவதன் ரகசியத்தை தெரிந்துகொண்டீர்களா?

பிரியாணி இலைகள், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் ருசியையும் அதிகரிக்கிறது. இது மருத்துவ குணங்களும் நிறைந்தது. இதற்காக பல காலமான உணவு மற்றும் மருந்தாகப்ப பயன்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இந்திய உணவுகளான பிரியாணி, புலாவ், சூப், கறி ஆகியவற்றில் பிரியாணி இலைகள் நீக்கமற இடம்பெற்றிருக்கும். இதன் சுவையும், மணமும் உணவில் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கச் செய்யும். இது பல உணவுடன் சேர்க்கப்படுவதற்கு இதன் மருத்துவ குணங்களும் காரணமாகிறது. இதில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது. பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இது சில ஆரோக்கிய நிலைகளை பராமரிக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் இந்த இலைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகின்றன. இந்த இலை வீட்டில் எரிப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை சக்திகள் சூழ்ந்து உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்தும். இந்த இலைகளை உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழிவு நோய் மேலாண்மை
உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்ற அச்சம் உள்ளதா அல்லது நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? எனில் இந்த இலைகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். இந்த இலைகளை உட்கொள்ளும்போது அது உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும். இது உங்கள் உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயால் அவதிப்பட்டீர்கள் என்றால், இந்த இலை உங்களுக்கு உதவும். இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் அடித்து வெளியேற்றுகிறது.
செரிமான மண்டலம்
பிரியாணி இலைகள், உங்கள் குடலில் வாயுத்தொல்லைகள் மற்றும் பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. இது நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் தடுக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பிரியாணி இலைகளில் உள்ள ஆர்கானிக் உட்பொருட்கள், உங்கள் வயிறு கோளாறுகளைப் போக்குகிறது. இது உங்களுக்கு எரிச்சல் தரும் வயிறு கோளாறுகள் ஏற்டாமல் தடுக்கிறது. உங்கள் உணவை எளிதில் செரிக்க வைக்கிறது. குடல் எரிச்சல், வயிறு இறுக்கம் ஆகியவற்றை போக்குகிறது.