Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள்!-top 10 parenting tips warning parents just dont do these 10 things in front of kids - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள்!

Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 01:05 PM IST

Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள், அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்.

Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள்!
Top 10 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 10 விஷயங்களை மட்டும் குழந்தைகள் முன்னிலையில் செய்யாதீர்கள்!

சத்தமாக சண்டை

உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் போடும் சிறிய சண்டைகள் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பற்றவர்களாகவும், பதற்றத்துடனும் வைக்கும். அவர்கள் வளர்ந்தவுடன், பிரச்னைகளை தீர்க்க சண்டை போடுவதை தடுக்கும் சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்வார்கள்.

ஒருவரையொருவர் குறைகூறுவது

உங்கள் பார்ட்னரை விமர்சிப்பது அல்லது ஒருவரையொருவர் குழந்தைகள் முன் குறைகூறிக்கொள்வது மிகவும் தவறான செயலாகும். இது உங்கள் குழந்தைகள் உறவுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது உங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களை குறை கூறுவது மற்றும் மட்டம் தட்டுவதை சரியென ஏற்றுக்கொள்ளச் செய்துவிடும்.

அதிக திரை நேரம்

நீங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் தரமான நேரத்தை செலவிடாமல் தொடர்ந்து திரையில் மூழ்கிக்கிடந்தீர்கள் என்றால், அதுவும் குழந்தைகளுக்கு தவறான உதாரணமாகும்.

விவாதத்துக்குப் பின்னர் தனியறையில் உறங்குவது

பெற்றோர் இருவரும் சண்டை போட்டப்பின்னர், தனித்தனி அறைகளில் உறங்குவது, குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால் குழந்தை விவாதத்தை பிரிவுக்கான ஒன்றாக பார்ப்பார்கள். இதுவும் அவர்கள் பிரச்னைகளை கையாளும் விதங்களை கற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்போதும் விமர்சனம்

உங்கள் குழந்தைகள் என்ன செய்தாலும், தொடர்ந்து நீங்கள் எதிர்மறையான ஃபீட்பேக்குகளைக் கொடுப்பது, அவர்களை விமர்சிப்பது அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும். இதனால் அவர்களின் சுயமதிப்பு அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

நிதி மேலாண்மை

கட்டற்ற நிதி மேலாண்மையும் உங்கள் குழந்தைகளுக்கு நிதி தொடர்பான குழப்பங்களை ஏற்படுத்தும். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சேமிப்பது மற்றும் கவனமாக செலவு செய்வதில் அக்கறை இல்லாமல் போய்விடும். எனவே நிதி மேலாண்மை மிகவும் முக்கியமான ஒன்று.

எதிர்மறையான உடல் மொழி

எதிர்மறையான உடல் மொழி மற்றும் வெளிப்பாடுகள், உங்கள் குழந்தைகளை பாதுகாப்பின்றி உணரவைக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும்.

பெரியவர் பிரச்னைகள் குறித்து பேசுவது

உங்கள் குழந்தைகளிடம் பெரியவர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவது, அவர்களுக்கு அதிகப்படியாகிவிடும். அது அவர்களுக்கு சுமையாகவோ அல்லது மனஅழுத்தமாகவோ உணரவைக்கும். மேலும் அவர்களால் பிரச்னைகளை முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.

விதிகளை புறக்கணிப்பது

உங்கள் குழந்தைகளுக்கு வழக்கமில்லாத ஒழுங்குமுறைகள் வைத்திருந்தால் அது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு எது சரி என்பதில் குழப்பம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு விதிகள் மற்றும் விளைவுகளை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும்.

ஆபத்தான நடவடிக்கைகள்

புகை தற்றும் அதிகப்படியாக மது அருந்துவது போன்ற செயல்கள் உங்கள் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைகளும் பிற்காலத்தில் அதையே பின்பற்றுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு இது கெட்ட பழக்கங்கள் கிடையாது என்று எண்ணவைக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.