Thangalaan Box Office: தங்கமுட்டை போடும் தங்கலான்.. சண்டை செய்யும் பா.ரஞ்சித்! - தொடரும் வசூல் வேட்டை!
Thangalaan Box Office: தங்கலான் திரைப்படம் 2 வது நாளில் 4 கோடி வசூல் செய்தது. சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது. - தொடரும் வசூல் வேட்டை!
Thangalaan Box Office: இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் தங்கலான்:
இந்தியாவில், வெளியான அன்று 13 கோடி வசூல் செய்த தங்கலான் திரைப்படம், 2 வது நாளில் 4 கோடி வசூல் செய்தது. சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கலான் திரைப்படம் 1.48 கோடி வசூல் செய்திருக்கிறது. நேற்றைய தினம், தமிழில் இந்தப்படத்தை 15 சதவீத மக்களும், தெலுங்கில் 15 சதவீத மக்களும் படம் பார்த்து இருக்கிறார்கள். இந்த தகவல்களின் படி பார்க்கும் போது தங்கலான் திரைப்படம் 7 நாட்களில் 35. 56 கோடி வசூல் செய்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
