Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? இதோ இந்த 10 குறிப்புகள் உதவும்!

By Priyadarshini R
Aug 20, 2024

Hindustan Times
Tamil

உங்கள் குழந்தைகளுக்கு அன்றாட பணிகளை செய்வதற்கு ஒரு வழக்கத்தை உருவாக்குவது மிகவும் கடினம். படிப்பதற்கு ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள். அது அவர்களின் நேரத்தை சரியாக செலவிட உதவும்.

உங்கள் நாளை ஒரு பிரார்த்தனையுடன் துவங்குங்கள். உங்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்களுக்கு பிரார்த்தனை உதவும். 

படிப்பதற்கு என்று தனியிடம் ஒன்றை உருவாக்குங்கள். அந்த இடம் மற்ற எந்த தொந்தரவுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்கவேண்டும். 

உங்கள் குழந்தைகளுக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயுங்கள். அவர்கள் எட்டக்கூடியவையாகவும் இருக்கட்டும். 

உங்கள் குழந்தைகள் நன்றாக கல்வி கற்க வேண்டுமெனில் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடும் வகையிலான கல்வியாக அது அமையவேண்டும். 

உங்கள் குழந்தைகள் சரிவிகித உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

கல்வி ஆப்கள், ஆன்லைன் கல்வி மெட்டீரியல்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளட்டும்.

ரிலேஷன்ஷிப்பில் பாசமாக இருப்பது எப்படி?