தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Thokku : தளதளன்னு தக்காளி தொக்கு செய்யணுமா? இதோ டிப்ஸ்!

Tomato Thokku : தளதளன்னு தக்காளி தொக்கு செய்யணுமா? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Dec 12, 2023 01:00 PM IST

Tomato Thokku : தளதளன்னு தக்காளி தொக்கு செய்யணுமா? இதோ டிப்ஸ்!

Tomato Thokku : தளதளன்னு தக்காளி தொக்கு செய்யணுமா? இதோ டிப்ஸ்!
Tomato Thokku : தளதளன்னு தக்காளி தொக்கு செய்யணுமா? இதோ டிப்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 400 கிராம் (பொடியாக நறுக்கியது)

கல் உப்பு – தேவையான அளவு

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – அரை கிலோ (அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம் அல்லது பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்)

குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு பொரிய விடவேண்டும்.

கடுகு பொரிந்தவுடக், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் கல் உப்பு மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து குழைந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் தக்காளி சேர்த்து அதுவும் நன்றாக குழைந்து வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து நன்றாக வெந்து, குழைந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு வந்த பின் ஒரு கைப்பிடி மல்லித்தழையை தூவி, அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைத்துவிட்டு, திறந்து பார்த்தால் மணமணக்கும் தக்காளி தொக்கு தளதளவென தயாராகியிருக்கும்.

சப்பாத்தி, இட்லி, தோசை அல்லது சாதம், வெரைட்டி ரைஸ் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

தக்காளி தொக்கு பிடிக்காதவர்கள் யாரும் இல்லையெனுமளவுக்கு அனைவருக்கு பிடித்தது இந்த தக்காளி தொக்கும். இதுபோல் மைய குழைவாக செய்தால், இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுவைக்க தோன்றும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்