தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Kulambu : நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

Tomato Kulambu : நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 20, 2023 11:30 AM IST

Tomato Kulambu : அருமையான அள்ளும் சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி?
சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் – 3-4 அல்லது பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 3

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப்

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், 4 பல் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும் அல்லது இதை அப்படியே அரைத்து பாலாகவும் பிழிந்துகொள்ளலாம்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு பொறிந்ததும், கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.

இப்போது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வரவேண்டும்.

தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக சாறு இறங்கி, பச்சை வாசம் போகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாப்பொடி சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவேண்டும்.

அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழைகள் தூவி இறக்க வேண்டும்.

தற்போது தக்காளி குழம்பு சாபிட தயாராக உள்ளது. இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் என டிஃபனுக்கும் தொட்டுக்கொள்ளலாம் அல்லது சாததுக்கும் ஊற்றிக்கொள்ளலாம்.

கூடுதலாக தக்காளி சேர்த்து, தண்ணீர் குறைத்து கெட்டியாக எடுத்தால் இதுவே தக்காளி வறுவல். அதை சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்