தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Gravy : அதிரடிக்கும் சுவையில் அரைச்சு வெச்ச தக்காளி குழம்பு! வதக்கி அரைச்சு செஞ்சு பாருங்க வித்யாசமா இருக்கும்!

Tomato Gravy : அதிரடிக்கும் சுவையில் அரைச்சு வெச்ச தக்காளி குழம்பு! வதக்கி அரைச்சு செஞ்சு பாருங்க வித்யாசமா இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Aug 27, 2023 11:00 AM IST

Tomato Gravy : அரைச்சு வைச்ச தக்காளி குழம்பு இருந்தா 10 இட்லி கூட பட்டுன்னு சாப்பிட முடியும். அதிரடிக்கும் சுவையில் அரைச்சு வெச்ச தக்காளி குழம்பு செய்வது எப்படி?

அரைச்சு வைக்கும் தக்காளி குழம்பு செய்வது எப்படி?
அரைச்சு வைக்கும் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 10 பல்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கசகசா – அரை ஸ்பூன்

தக்காளி – 2 அல்லது 3

பட்டை – 1

கிராம்பு – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கறி மசாலா – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

தேங்காய் – ஒரு கைப்பிடி

(உங்களுக்கு தக்காளியின் புளிப்பு சுவை பிடிக்கும் என்றால், அதிகம் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். இல்லை குறைவான அளவு தக்காளி போதுமானது)

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, ஒரு கைப்பிடியளவு சின்ன வெங்காயம், கசகசா, சோம்பு, இஞ்சி, பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா, கொத்தமல்லித்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அனைத்தையும் ஆறவைத்து ஒரு கைப்பிடியளவு தேங்காய் சேர்த்து நன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி பட்டை, கிராம்பு தாளித்து, ஒரு கைப்பிடியளவு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், இந்த அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் பிரிந்து குழம்பு நன்றாக கொதித்து வரும்போது, ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லித்தழை தூவி, மூடி வைத்து இறக்க வேண்டும்.

சூடான இட்லியுடன் இந்த தக்காளி குழம்பை சேர்த்து பரிமாறினால், 10 இட்லி கூட பட்டுன்னு சாப்பிட முடியும்.

பொதுவாகவே இட்லி, தோசைக்கெல்லாம் சைட் டிஷ் நன்றாக இருந்தால்தான் அதிகம் சாப்பிட முடியும். இல்லாவிட்டால் ஓரிரு இட்லிகள் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தைகளுக்கும் புளிப்பு சுவை நிறைந்த இந்த தக்காளி குழம்பு மிகவும் பிடிக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்