Kadi Joke: ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே..’ இன்றைய மொக்கை ‘கடி’ காமெடிகள்.. ஒன்றா ரெண்டா.. நிறைய இருக்கு!-today kadi joke august 09 2024 tamil mokka comedy jokes tamil sirippu jokes - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke: ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே..’ இன்றைய மொக்கை ‘கடி’ காமெடிகள்.. ஒன்றா ரெண்டா.. நிறைய இருக்கு!

Kadi Joke: ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே..’ இன்றைய மொக்கை ‘கடி’ காமெடிகள்.. ஒன்றா ரெண்டா.. நிறைய இருக்கு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 09, 2024 10:09 AM IST

Kadi Joke: ‘எல்லாரும் வந்துட்டீங்களா.. சரி, அடுக்கடுக்கா.. வழக்கம் போல மொக்கை ஜோக் ரெடி.. படிங்க.. சிரிங்க’

Kadi Joke: ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே..’ இன்றைய மொக்கை ‘கடி’ காமெடிகள்.. ஒன்றா ரெண்டா.. நிறைய இருக்கு!
Kadi Joke: ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே..’ இன்றைய மொக்கை ‘கடி’ காமெடிகள்.. ஒன்றா ரெண்டா.. நிறைய இருக்கு!

‘நீ ஒரு ஆர்டிஸ்ட்ல’

ஆசிரியர்: ஏன்டா.. நாய் படம் வரைஞ்சியே, அது வாயை வரையாம விட்டுட்ட..!

மாணவன்: சார்.. அது வாயில்லா ஜீவன் சார்!

‘ரொம்ப டெக்னிக்கா போறான்’

அம்மா: டேய்.. ஏன் பன்னுல தண்ணீ ஊத்திட்டு இருக்க?

மகன்: நீங்க தானே பன்னீர் கேட்டீங்க!

‘அந்த கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன்’

வாடிக்கையாளர்: எந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டும்?

கடைக்காரர்: அது காட்டாது, நாம தான் பார்த்துக்கணும்!

‘இது அது தான..’

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூக்கிய மாதம் எது?

மாணவன்: ம்… கொசு இல்லாத மாதம் சார்!

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே’

அப்பா: ஏன் அந்த பொண்ணு கூட பேசிட்டு இருக்க?

மகன்: கீ தொலைஞ்சு போச்சுப்பா அதான் அவள்ட்ட கேட்டுட்டு இருந்தேன்1

அப்பா: அவளிடம் எதற்கு கேட்குற?

மகன்: அவள் பெயர் தான், ‘கீ’தா

‘முட்டு சந்து முதல் தெரு’

நோயாளி: டாக்டர் டாக்டர்.. என்னை நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எந்த இடத்துலப்பா?

நோயாளி: அந்த முக்கு சந்து பக்கத்துல டாக்டர்!

‘ஸ்.. ப்பா.. முடியல்..’

டாக்டர்: ஸாரிப்பா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன், உன் கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு

நோயாளி: பொய் சொல்லாதீங்க டாக்டர்.. நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்ல.. அது எப்படி ஃபெயில் ஆகும்?

‘பயங்கரமான ஆளா இருப்பாரோ..’

பக்கத்துவீட்டுக்காரர் 1: ஆமா.. அவர் ஏன், மாடி மேல சந்தனம் பூசிட்டு இருக்காரு?

பக்கத்து வீட்டுக்காரர் 2: அது மொட்டை மாடியாம்ங்க.. அதான் சந்தனம் பூசிட்டு இருக்காரு!

‘கேட்காமலே இருந்திருக்கலாம்..’

ஆசிரியர்: அண்ணனும், தங்கையும் ஓடி வர்றாங்க.. அண்ணனுக்கு மேல் மூச்சு வாங்குது.. தங்கை என்ன பண்ணிருப்பா?

மாணவன்: ஃப்யி-மேல் மூச்சு வாங்கிருப்பாங்க சார்!

‘ஆனாலும் ரொம்ப குசும்பு’

ஆசிரியர்: காபியை பார்த்து டீ கவலை பட்டுச்சாம் ஏன்?

மாணவன்: அந்த ‘மணமான’ காபி சார்!

‘நீ பொழச்சுப்பப்பா’

ஆசிரியர்: ரஷ்யா ஏன் கொசுவே இல்ல.. யாராச்சு சொல்லுங்க?

மாணவன்: சார்.. அங்கே கொசுவுக்கு வேறு பெயர் சார்!

‘ரொம்ப உக்கிரமா இருக்கான்’

நண்பன் 1: நேற்று தியேட்டர்ல ஏ-ரோல இருந்தேன் படமே தெரியலடா!

நண்பன் 2: முன்னடி பி-ரோல் இருந்ததுடா!

‘ஓ.. அப்படி வர்றீக..’

வாடிக்கையாளர் 1: ஏன் இந்த பாலைவன போஸ்ட் ஆபிஸில், ஸ்டாம்ப் வாங்கிட்டு, எல்லாரும் வெளியே போறாங்க?

வாடிக்கையாளர் 2: வெளியே தான் ‘ஒட்ட-கம்’ இருக்கு!

‘சிறப்பான தரமான சம்பவம்’

மந்திரி: என் அரசர் சத்தியத்திற்கு பெயர் போனவர்..!

ராஜகுரு: எப்படி சொல்றீங்க?

மந்திரி: பல் துலக்க கூட ‘ப்ராமிஸ்’ தான் யூஸ் பண்ணுவார்!

மேலும், இது போன்ற கடி ஜோக்குகளை தினமும் படிக்க, ரசிக்க, கடுப்பாக, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்!

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.