World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்ன தெரியுமா?
World Paper Bag Day 2024 : உலக பேப்பர் பை தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல முக்கிய தகவல்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட தினம் தான் இந்த உக பேப்பர் பை தினம். நாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும். அன்றாட வாழ்க்கையில் நாம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றையே செய்யலேண்டும் என்பதற்காக மக்கள் மற்றும் நிறுவனங்கள் நீடித்த ஆற்றலை வளர்த்தெடுக்கும் முறைக்கு மாறவேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
மளிகை கடைகள் முதல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் கடைகள் வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இந்த பாலித்தீன் பைகள், கடந்த காலங்களில் இது மிகவும் அதிகம் ஆகும். ஆனால் தற்போது மக்களிடம் விழிப்புணர்வு இருந்தாலும், அது கட்டுப்படுத்தும் அளவில் இல்லை என்றுதான் கூறமுடியும்.
நமது பூமிக்கு இந்த ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் மண்ணுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து போராட பெரும் இயக்கங்கள் உருவெடுத்தன.